தூத்துக்குடி, மார்ச்,21
கனிமொழி எம்.பியின் இமாலய வெற்றிக்கு, தூத்துக்குடி
கிழக்கு ஒன்றிய திமுகவின் பங்கு மிக முக்கியமாக இருக்க வேண்டும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவுரை வழங்கினார்.
தூத்துக்குடி தெற்குமாவட்ட
திமுக
விற்குட்பட்ட ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் உள்ளது. திமுக கிழக்கு ஒன்றிய செயலாளராக மாப்பிள்ளை யூரணி பஞ்சாயத்து தலைவர்
சரவணகுமார் செயலாற்றி வருகிறார். கிழக்கு ஒன்றிய
திமுக செயலாளர் சரவணக்குமார் , மற்றும்
திமுக கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள்
தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி என்ற அமைப்பாளா ரவி பொன்பாண்டி, இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் வழக்கறிஞர் பால்துரை, ஸ்டாலின், தொழிலாளர் அணிதுணை அமைப்பாளரும் ஒன்றிய கவுன்சிலருமான அந்தோணி
தனுஷ்பாலன், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஆரோக்கிய மேரி,ஒன்றிய அவைத் தலைவர் ஜோதிடர் முருகன், துணைச் செய லாளர்கள் கணேசன்,
ராமசந்திரன், வசந்தகுமாரி பொருளார் மாரியப்பன், ஒன்றிய கவுன்சிலர்கள் தொம்மை சேவியர், ஆனந்தி, முத்து மாலை, ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதி ராஜா, மாவட்ட பிரதிநிதிகள் தர்மலிங்கம், சப்பானிமுத்து, சிவக்குமார், ஒன்றிய சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ராஜேந்திரன்,
அனைவரையும்
அழைத்து தெற்கு மாவட்ட செயலாளரும் மீன்வளம் மற்றும் மீனவர்நலன் கால்நடை பராமாரிப்பு துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் தனது கணேஷ்நகரில் உள்ள இல்லத்தில் வைத்து முக்கிய ஆலோசனை வழங்கினார்.
அப்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறுகையில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறும் மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் கனி மொழி எம்.பி மீண்டும் போட்டியிடுகிறார். இந்த முறை அவர் சுமார் 5லட்சம்
வாக்குகள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற வேண்டும். தமிழகத்திலேயே அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற
எம் பி வேட்பாளர் கனிமொழி கருணாநிதி என்று பெயரை பெற வேண்டும்
இதற்காக கிழக்கு ஒன்றியம் பகுதியில் நிர்வாகிகள் இரவு பகல் பாராமல்
அயராது பணியாற்ற வேண்டும் குறிப்பாக கூட்டணி கட்சியினருடன் இணைந்து பணியாற்ற வேண்டும். தற்போது தின்னை பிரச்சாரம் மூலம் மக்களை நோில் சந்தித்து ள்ளோம். அதனடிப்படை யில் மக்களின் எண்ண ஓட்டத்தை அறிந்து கொள்ள முடிகிறது. 80 சதவீத மக்களை சந்தித்து விட்டோம். தொடாந்து தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் வரை அனைவரும் தங்கள் சொந்தபணியைகொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு முழுமையாக பணியாற்ற வேண்டும் எதிர்த்து நிற்கும் அதிமுக, பிஜேபி, உள்பட அனைத்து கட்சி வேட்பாளர்களும் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டு சிறப்பாக பணியாற்றுமாறு அறிவுரை வழங்கினார். கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட மாப்பிள்ளையூரணி பகுதி அதிமுக கோட்டையாக விளங்கி வந்தது
அதனைத் தகர்த்தெறியும் வகையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கிழக்கு ஒன்றிய செயலாளராக சரவணக்குமாரை நியமித்தார். அதன் பிறகு கிழக்கு ஒன்றிய பகுதி முழுவதும்
திமுகவின் இரும்பு கோட்டையாக மாறியது. இப்பகுதி பொதுமக்களுக்கு எந்த ஒரு குறைகள் என்றாலும் உடனுக்குடன் நிவர்த்தி செய்து கொடுப்பது, அரசின் திட்டங்கள் அப்பகுதி மக்களுக்கு முழுமையாக சென்றடைய களப்பணியாற்றுவது கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரையும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ரோல் மாடலாக இருந்து ஒன்றிய செயலாளர் சரவணகுமார்
சிறப்பாக செயலாற்றி வருவதால் இப்பகுதி முழுவதும் திமுகவின் கோட்டையாக மாறி வருகிறது
இந்நிலையில்
கிழக்கு ஒன்றியத்தில் உள்ள அனைத்து வாக்குகளும் சிந்தாமல் சிதறாமல் கனிமொழி
எம்.பியின் இமாலய வெற்றிக்கு ஒரு தூணாக விளங்கும் வகையில் அமைய செயல்பட வேண்டும் என
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுரை வழங்கினார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் . இது குறித்து
ஒன்றிய செயலாளர் சரவணகுமார்
பேசுகையில் கனிமொழி எம்.பி யின்
இமாலய வெற்றிக்கு தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் முக்கிய அங்கமாக விளங்கும் இதற்காக இரவு பகல் என்று பாராமல் நிர்வாகிகள் களப்பணியாற்றுவோம் என சரவணக்குமார் உறுதி அளித்தார் .
இந்த ஆலோசனையின் போது
முன்னாள் எம்.எல்.ஏவும் தலைமை செயற் குழு உறுப்பி னருமான டேவிட் செல்வின், வக்கீல் கிருபாகரன், பூங்குமார், கபடிகந்தன், உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

