தூத்துக்குடி திருநெல்வேலி ஒருங்கினைந்த முன்னாள் திமுக மாவட்ட செயலாளரும், தூத்துக்குடி முன்னாள் நகர மன்ற உறுப்பினருமான கேவிகே சாமி 101வது பிறந்த நாளை முன்னிட்டு ஆரோக்கியபுரம் புனித ஆரோக்கியநாதர் ஆலயம் அருகில் மரம் நடும் விழா நடைபெற்றது.
தூத்துக்குடியில் கே வி கே சாமி 101வது பிறந்த நாளை முன்னிட்டு ஆரோக்கியபுரம் புனித ஆரோக்கிய நாதர் ஆலயம் அருகே தெற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளர் பிலோமின் ராஜ் தலைமையில், சிலுவை அந்தோணி, அந்தோணிசாமி ஆகியோர் முன்னிலையில் மரம் நடும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஆரோக்கியபுரம் ஊா் நிா்வாகிகள் ஆரோக்கியராஜ், தேவசகாயம் வசந்த், ஜெயசீலன், ரவி உட்பட பலா் கலந்து கொண்டனா், தூத்துக்குடி மாவட்ட காமராஜர் நற்பணி மன்றம் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்துள்ளனா்

