திருநெல்வேலி,
திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலைஞர் மறைவிற்கு பின் கழகத்தை கட்டுக்கோப்பாக இராணுவ மிடுக்குடன் அனைத்து மாவட்ட நிர்வாகிகளையும் ஒருங்கிணைத்து அதிமுக ஆட்சிக்காலத்திலும் கட்சிப் பணியை திறம்பட செய்து எதிர்கட்சி தலைவராக ஸ்டாலின் பணியாற்றிய காலத்தில் 2016ல் கலைஞர் உருவாக்கிய திமுக தலைமையிலான கூட்டணி கட்சித் தலைவர்களுடனும் நல்ல நட்புறவுடன் இருந்து தமிழக மக்களுக்காக பணியாற்றிய சூழ்நிலையில், 2019ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின் போது தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி போட்டியிட்டு, அதில் 38 தொகுதியில் வெற்றி கண்டு சாதனை படைத்தார் மு.க.ஸ்டாலின்.
அதன் பின் 2021ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றிப் பெற்று திமுக தனிப்பெரும்பாண்மையுடன் ஆட்சியமைத்து தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பணியாற்றி வரும் நிலையில் கலைஞர் உருவாக்கிய தேசிய அரசியல் கட்சி தலைவர்கள் நட்பை அப்படியே பின்பற்றி தேசிய அளவில் இந்தியா கூட்டணியை உருவாக்கி அபார சாதனை படைத்து வரும் சூழ்நிலையில் தமிழகம், புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கோடு எதிர்கால இந்திய அரசியலை நிர்ணயிக்கும் சக்தியாக விளங்கும் தலைவராகவும், முதலமைச்சராகவும் பணியாற்றும் மு.க.ஸ்டாலினுக்கு அரசியல் மட்டுமின்றி பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு பக்கபலமாக இருந்து வருபவர் அவரது மருமகன் சபரீசன். இவர் திமுகவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வருகிறார்.
இந்நிலையில், சபரீசனின் சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டத்தில் உள்ள மேலசெவல் கிராமத்திற்கு வருகை புரிந்தார். அவரை மாநில திமுக நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் ஜெயக்குமார் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அப்போது, சபரீசன் வசந்தம் ஜெயக்குமாரிடம் மாநில அரசியல் நிலவரம் குறித்து பேசுகையில்: வரும் நாடாளுமன்ற தேர்தலின் போது உங்களது அணி சார்பில் தமிழகம் முழுவதும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை முழுமையாக ஆதரித்து நெசவாளர் அணி பணியாற்ற வேண்டும். இந்த இயக்கத்தின் மீது பற்றுக் கொண்டு முழுமையாக பணியாற்றி வரும் நீங்கள் எவ்வித தொய்வுமின்றி இன்னும் கூடுதலாக நன்றாக பணியாற்றுங்கள். இயக்கத்திற்கு பணியாற்றிய யாரையும், நமது கழக தலைவர் அங்கீகாரம் கொடுக்க கூடிய நேரத்தில் நிச்சயம் கொடுப்பார். அதற்கேற்றார் போல் உங்களது பணியும் அமைய வேண்டும், என்று கேட்டுக்கொண்டார்.

