தூத்துக்குடி,
தூத்துக்குடி மாநகராட்சி மாதாந்திர கூட்டம் மாநகராட்சி கூட்டரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாநகராட்சி மீளவிட்டான் கிராமம் 0.85 ஏக்கர் மற்றும் 50 செண்ட் பரப்பளவு மனைப்பிரிவிற்கு திட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 4 மண்டலங்களின் பகுதிகளில் 7 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 10 நகர் நல மையங்கள் அமைந்துள்ளது. எனவே, பொது சுகாதாரம் மற்றும் அதன் தொடர்புடைய அலுவலக பணிக்கு ஒரு வாகனத்தினை அரசாங்க மின் சந்தை மூலம் நேரடியாக வாங்குவதற்கும் நகர்புற வாழ்வாதார மையத்தின் சேவை கட்டணம் மூலம் மேற்கொள்ளவும் மாமன்ற அனுமதி வேண்டப்படுகிறது. உள்பட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தூத்துக்குடி மாவட்டம் மழை வெள்ளப் பாதிப்பிற்கு ஆளான நிலையில் பிரதமர் நரேந்திர மோடி எந்த நிதியும் வழங்காமல் தூத்துக்குடிக்கு வருகை தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கவுன்சிலர்கள் சந்திரபோஸ், எடின்டா, கற்பககனி ஆகியோர் கருப்பு உடை அணிந்து எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்: ஒன்றிய அரசு எந்த நிதி கொடுத்தாலும், கொடுக்கவில்லை என்றாலும், தமிழக முதலமைச்சர் தமிழ்நாட்டைச் சேர்ந்த என் மக்களுக்கு நான் வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்து, அவர்களது நலனை பேணி பாதுகாப்பேன் என்று கூறி அனைத்துப் பணிகளையும் செய்து கொடுத்தது மட்டுமின்றி பல்வேறு உதவித்தொகைகள் மற்றும் நிவாரணங்கள் வழங்கினார். சாலை, கால்வாய், குடிதண்ணீர், மின்விளக்கு, சுகாதாரத்தை பேணி பாதுகாக்கும் வகையில் குப்பை அப்புறப்படுத்துதல், கால்வாய்களில் தேங்கியுள்ள மணல் அப்புறப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் ஆணையராக பொறுப்பேற்றுள்ள மதுபாலனை வரவேற்றும், அதிமுக கவுன்சிலர்கள் மந்திரமூர்த்தி, வீரபாகு, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கவுன்சிலர் மும்தாஜ், திமுக மண்டல தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், கவுன்சிலர்கள் சுரேஷ்குமார், ரெக்ஸ்லின், ராமகிருஷ்ணன், இசக்கிராஜா, ராஜதுரை, நாகேஸ்வரி, முத்துவேல், கந்தசாமி, சரவணக்குமார், பொன்னப்பன், கனகராஜ், சி.பி.ஐ. கவுன்சிலர் தனலெட்சுமி, சி.பி.எம். கவுன்சிலர் முத்துமாரி, மதிமுக கவுன்சிலர் ராமுஅம்மாள் உள்ளிட்டவர்கள் பேசினார்கள்.
திமுக கவுன்சிலர் ராஜேந்திரன், கந்தசாமி ஆகியோர் மேயர் மற்றும் ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
பின்னர் மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்: எதிர்பாராத கன மழையால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டிருந்தது. இருந்தாலும், பல்வேறு பணிகளை தொய்வின்றி உங்கள் ஆதரவோடு நிறைவேற்றியுள்ளோம். ஏற்கனவே மாநகராட்சி பகுதியில் 1500 சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. வரும் மார்ச் 4ம் தேதி 3ம் ஆண்டு தொடக்கப்பணிகளை தொடங்க உள்ளோம். மேலும், புதிதாக 500 சாலைகள் அமைக்கும் பணி வரும் மார்ச் 5ம் தேதி தொடங்கப்படவுள்ளன. அந்த பணிகள் தொடங்கிய பின்பு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலும், தொடங்கிய திட்டம் என்பதால் தொய்வின்றி அந்த பணிகள் 60 வார்டுகளிலும் பாரபட்சமின்றி முழுமையாக நடைபெறும். அதில் எந்த இடையூறுகளும் இல்லாத வகையில் அனைவரும் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கி மாநகராட்சியின் வளர்ச்சிக்கு துணை புரிய வேண்டும், என்று மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார்.

பின்னர் ஆணையர் மதுபாலன் பேசுகையில்: உங்கள் அனைவருடைய ஒத்துழைப்பும் அவசியம், உங்களது கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றி கொடுப்பதற்கு நாங்கள் துணை நிற்போம். உரிமையோடு எந்த குறைபாடுகளாக இருந்தாலும் எங்களது கவனத்திற்கு கொண்டு வாருங்கள். தூத்துக்குடியை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்ல நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று பேசினார்.
கூட்டத்தில் இணை ஆணையர் ராஜாராம், பொறியாளர் சரவணன், செயற்பொறியாளர் திட்டம் ரங்கநாதன், உதவி ஆணையர் தனசிங், நகர்நல அலுவலர் சுமதி, சுகாதார ஆய்வாளர்கள் ஹரிகணேஷ், ராஜசேகர், ராஜபாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மண்டல தலைவர்கள் அன்னலெட்சுமி, கலைச்செல்வி, கவுன்சிலர்கள் கீதாமுருகேன், வைதேகி, ஜாக்குலின்ஜெயா, பேபி ஏஞ்சலின், சுப்புலெட்சுமி, சோமசுந்தரி, ஜெயசீலி, விஜயலெட்சுமி, சுதா, கண்ணன், அதிஷ்டமணி, ஜான்சிராணி, மெட்டில்டா, அந்தோணி பிரகாஷ் மார்ஷலின், பாப்பாத்தி, அதிமுக கவுன்சிலர்கள் வெற்றிச்செல்வன், விஜயராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

