தூத்துக்குடி
அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி காய்கறி மார்க்கெட் அருகில் உள்ள அவரது சிலைக்கு மதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பேரறிஞர் அண்ணாவின் 55வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு தூத்துக்குடி தமிழ்ச்சாலை ரோட்டில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவுச்சிலைக்கு மதிமுக சார்பில் மாநகர செயலாளர் முருகபூபதி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பேரறிஞர் அண்ணாவை வாழ்த்தி கோசங்கள் எழுப்பப்பட்டது.
இதில் மாவட்ட அவைத் தலைவர் பேச்சிராஜ், மாநில இலக்கிய அணி தலைவர் தராசு மகாராஜன், செய்தி வெளியீட்டு அணி செயலாளர் நக்கீரன், மாநகர துணைச் செயலாளர் முருகேசன், நகர் அவைத் தலைவர் தொம்மை, எம்எல்எப் மாநில பொருளாளர் அனல் செல்வராஜ், முன்னாள் ஒன்றிய செயலாளர் சுந்தர்ராஜன், மாவட்ட பிரதிநிதி செந்தாமரை கண்ணன், இளைஞரணி செயலாளர் பாலசுப்பிரமணியன், சரவணன் உட்பட மதிமுகவினர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள்.

