தூத்துக்குடி
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மேலுமொரு உன்னத திட்டமான மக்களுடன் முதல்வர் என்ற நிகழ்வு கடந்த 19ம் தேதி தொடங்கப்பட்டு ஓவ்வொரு பகுதியாக அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்ட இறுதி நிகழ்வான வார்டு 1,2,3 பகுதிகளுக்கு போல்பேட்டை தங்கம்மாள் மேல் நிலை பள்ளியில் நடைபெற்ற முகாமை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு, மேலும் இத்திட்டத்தில் பெருமளவில் கலந்து கொண்ட மாநகர மக்களுக்கு என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்வதோடு மக்களின் கோரிக்கைகள் வரும் காலங்களில் விரைந்து நிறைவேற்றித் தரப்படும் என்று உறுதியளித்தது மட்டுமின்றி மாகராட்;சி நிர்வாகம் சார்பில் கலந்து கொண்ட அதிகாரிகளிடம் வரப்பெற்ற மனுக்களை பெற்று என்ன கோரிக்கை என்று ஆய்வு செய்தார்.
உதவி ஆணையர் தனசிங், உதவி செயற்பொறியாளா பிரின்ஸ் ராஜேந்திரன், சுகாதார ஆய்வாளர் ஹரிகணேஷ், கவுன்சிலர்கள் ரெங்கசாமி, காந்திமணி, சுப்புலட்சுமி, பகுதி செயலாளர் சிவக்குமார், மற்றும் ஜோஸ்பர், பிரபாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

