• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்!!!

policeseithitv by policeseithitv
January 19, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்!!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி

மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘மக்களுடன் முதல்வர்” எனும் புதிய திட்டத்தை கடந்த ஆண்டு கோயம்புத்தூரில் தொடங்கி வைத்தார்.

திட்டத்தின் படி மக்கள் அதிகமாக பயன் பெறும் வகையில் வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிற்பட்டோர் நலத்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் மேம்பாட்டு கழகம், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, மின்;சாரத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, சிறு, குறு, நடுத்தர தொழில்துறை, காவல்துறை, மருத்துவதுறை உள்பட அத்தியாவசிய துறைகளின் அதிகாரிகள், ஒரே இடத்தில் கலந்து கொள்ளும் வகையில் சிறப்பு முகாம்கள் நடைபெறும்

மழை வெள்ள பாதிப்பால் தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த முகாம் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது நிலைமை சீரடைந்து உள்ளதால் ;, இந்த முகாம் நடைபெறுகிறது. தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 22, 26, 27, 28, 39 ஆகிய வார்டு பகுதிகளுக்கு, தூத்துக்குடி சத்திரம் தெரு மாநகராட்சி அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் நடைபெற்ற முகாமிற்கு மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், முன்னிலை வகித்தார். வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்து எல்லாத்துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் கொடுக்கும் கோரிக்கை மனுக்களுக்கு விரைவாக தமிழக முதலமைச்சர் உத்தரவு படி தீர்வு காண வேண்டும். பொதுமக்களை எவ்வித சீரமத்திற்கும் உள்ளாக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் பொதுமக்களுக்கு உங்கள் ஒத்துழைப்பு அவசியம் பொதுமக்களும் தாங்கள் கேட்கும் ஆவணங்களை முறையாக கொடுத்து உதவுவார்கள். என்று கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சியின் 4, 11, 12, 13, 14, 20, 21, ஆகிய வார்டுகளுக்கு கந்தசாமிபுரம் ஆர்.சி.பெத்தானி நடுநிலைப் பள்ளியிலும், 34, 35, 51, ஆகிய வார்டுகளுக்கு மில்லர்புரம் செயின்ட் மேரீஸ் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 51 வது வார்டுக்கு உட்பட்ட காதர்மீரான்நகர், ஊரணி ஒத்தவீடு, முடுக்கு காடு, வீர நாயக்கன் தட்டு மற்றும் 60வது வார்டுக்குட்பட்ட பகுதிகளுக்கு தெர்மல்நகர் கேம்ப் 1ல் அமைந்துள்ள மாநகராட்சி துவக்க பள்ளியிலும் நடைபெற்ற முகாம்களை அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் லட்சுமிபதி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மாவட்ட வருவாய் அலுவலர் அஜய்சீனிவாசன், தாசில்தார் பிரபாகர், மாநகராட்சி மண்டலதலைவர் பாலகுருசாமி, மாநகராட்சி உதவி ஆணையர் ராஜாராம், செயற்பொறியாளர் சரவணன், திட்டப்பொறியாளர் ராமசந்திரன், சுகாதார ஆய்வாளர் ராஜசேகர், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்டப்பிரதிநிதிகள் ராஜ்குமார், மீனாட்சி சுந்தரம், கவுன்சிலர்கள் சரண்யா, மரியகீதா, மகேஸ்வரி, ராமுத்தம்மாள், பொன்னப்பன், சுரேஷ்குமார், ஜான்சிராணி, மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மாநகர தொழிலாளர் அணி அமைப்பாளர் முருகஇசக்கி, பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சூர்யா, வட்டச்செயலாளர்கள் சதீஷ்குமார், மனோ, சுரேஷ், சிங்கராஜ், வட்டப்பிரதிநிதி பாஸ்கர், மற்றும் மணி, அல்பட், மாப்பிள்ளையூரணி நகர கூட்டுறவு கடன்சங்க செயலாளர் பாலமுருகன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன்பாண்டியன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு இடங்களில் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

Next Post

சேர்வைக்காரன்மடம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பதவிக்கு ஆபத்து – ஒழுங்கு நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் பெருந்தலைவர் மக்கள் கட்சி மனு!!!

Next Post
சேர்வைக்காரன்மடம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பதவிக்கு ஆபத்து – ஒழுங்கு நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் பெருந்தலைவர் மக்கள் கட்சி மனு!!!

சேர்வைக்காரன்மடம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பதவிக்கு ஆபத்து - ஒழுங்கு நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் பெருந்தலைவர் மக்கள் கட்சி மனு!!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In