தூத்துக்குடி.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த பெரும் மழையால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக கோரம்பள்ளம் குளம் உடைப்பு ஏற்பட்டது. கூடுதல் பாதிப்பாக அமைந்தது. கடந்த காலங்களில் பெய்த மழையில் பாதிக்காத பகுதியில் கூட இந்த மழை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாநகரில் பல்வேறு பகுதியில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைத்து அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. சிலர் தங்களது வீடுகளிலிருந்து வெளியில் வரமுடியாத நிலையில் இருந்து தற்போது மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு ஒருசிலர் திரும்பியுள்ள நிலையிலும் இன்னும் முற்றிலுமாக பழைய நிலைக்கு திரும்ப முடியாத பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் பலர் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 17ம் தேதி ஏற்பட்ட பெரு மழை வெள்ள பாதிப்பின் போது பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கம் நிறுவனத் தலைவர் இசக்கி ராஜா தேவர் நேரடியாக களமிறங்கி 3ம் மைல் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் வேகமான வெள்ள நீர் ஊருக்குள் புகுந்த போது குடியிருப்புகளில் இருந்த ஆடுகளை பரிசல் மூலம் தனது இயக்க நிர்வாகிகள் மூலம் மீட்டெடுத்த நாள் முதல் தொடர்ந்து 9 நாட்களாக தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோவில்பிள்ளை நகர், காதர் மீரான் நகர், பண்டு கரை, முத்துநகர், பெரியசாமிநகர், எம்ஜிஆர்நகர், சத்யா நகர், முடுக்குகாடு, பிஎண்டி காலனி, 3ம் மைல், திருவிக நகர், இந்திராநகர், மறவன்மடம், டிஎம்பி காலனி, முருகேசன் நகர், காரசேரி, கொங்கராயன்குறிச்சி, பெருமாள்புரம், ஆறுமுகநேரி, கிருபைநகர் உள்ளிட்ட பகுதி பொதுமக்களுக்கு 15 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, மளிகை சாமான்கள், பால் பவுடர், குடிநீர் பாட்டில், சேலை, போர்வை, லுங்கி, அமிர்தாஞ்ஜன், சோப்பு, பிரஸ், பேஸ்ட், நாப்கின், பிஸ்கட், பிரட், உள்ளிட்ட 21 வகை பொருட்கள் அடங்கிய நிவாரண பொருட்களை 22 ஆயிரம் குடும்பங்களுக்கு தனியார் நிறுவன பங்களிப்புடனும், தனது பங்களிப்புடனும் வழங்கினார்.



காட்டாற்று வெள்ளத்தை சமாளிக்கும் வகையில் இராணுவ வீரர்கள் போல் செயல்பட்டு பொதுமக்களை காத்தும், தற்போது வரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவளித்து வரும் பி.எம்.டி. இயக்கத்தினரின் பணியை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
இக்கட்டனான சூழ்நிலையிலும் இதுபோன்ற உதவிகளை வழங்கியதில் திராவிட கட்சிகளை மிஞ்சும் வகையில் பி.எம்.டி இயக்கம் சார்பில் வழங்கியது அரசியல் கட்சிகள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

