தூத்துக்குடி
பெரியார் 50வது நினைவு நாளையொட்டி தென்பாகம் காவல்நிலையம் அருகில் உள்ள அவரது சிலைக்கு கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் கீதாஜீவன், தங்கம் தென்னரசு, சுப்பிரமணியன், மேயர் ஜெகன்பெரியசாமி, ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டலத் தலைவர் கலைச்செல்வி, அரசு வழக்கறிஞர் ஆனந்த கபரியேல்ராஜ், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ரமேஷ், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், சுரேஷ்குமார், மாவட்;ட மருத்துவ அணி துணை அமைப்பாளர் மகிழ்ஜான், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், வட்டச்செயலாளர்கள் பாலகுருசாமி, கதிரேசன், சிங்கராஜ், சதீஷ்குமார், வட்டப்பிரதிநிதிகள் துரை, பாஸ்கர், மாவட்ட சிறுபான்மை பிரிவு அணி துணை அமைப்பாளர் பெனில்டஸ், மாவட்ட பொறியாளர் அணி தலைவர் பழனி, மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி, திராவிடர் கழக மாவட்ட தலைவர் முனியாசமி, மாவட்ட செயலாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

