தூத்துக்குடி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்படி கடந்த 17,18 தேதிகளில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட குறிஞ்சிநகர், ராம்நகர், ரஹ்மத் நகர், முத்தம்மாள் காலனி மற்றும் ஆதிபராசக்தி நகர் ஆகிய பகுதிகளிலுள்ள வெள்ளநீரை வெளியேற்றுவதற்கான மின் மோட்டார் அறைகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று பார்வையிட்டு அதனை இயக்குவதற்காக தேவையான நடவடிக்கைகள் எடுப்பதற்காக டிரக்டரை மேயர் ஜெகன் பெரியாசாமி ஓட்டி சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அப்பகுதியில் பணியாற்றும் பணியாளர்களை நல்லமுறையில் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த பகுதிகளில் ஏற்கனவே ஜெனரேட்டர் மூலம் மோட்டார்கள் இயக்கப்பட்டு வந்தாலும் தற்பொழுது தான் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது ஆகையால் இந்த பகுதியில் உள்ள பம்ப் ரூம்களில் உள்ள மின் மோட்டார்களை இயக்குவதற்கு தேவையான மின் வசதி வருகின்றதா, தண்ணீர் அளவை விட்டு பேனல் போர்டு உயரமாக உள்ளதா என்றும் மின் மோட்டார் இயக்குபவர்களையும் நேரில் அழைத்துச் சென்று பார்வையிட்டு மேலும் அப்பகுதியில் மின் பற்றாக்குறை இருந்தால் அதனை நிவர்த்தி செய்யவும் மின் மோட்டார்களை இயக்கவும் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் அந்த பகுதியில் மழைநீர் வேகமாக வெளியேற்றப்படும். மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், மற்றும் ஜோஸ்பர், பிரபாகர், உடன் சென்றனர்.

