தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். மார்க்கன்டேயன் எம்.எல்.ஏ, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் மிக்ஜாம் புயலினால் சென்னையில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெரும் மழை பெய்தது. எதிர்கட்சிகள் பல்வேறு வகையில் விமர்சனம் செய்தனர். அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைச்சர்கள் அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரையும் களப்பணியாற்ற உத்தரவிட்டு முதலமைச்சரும் நேரடியாக களம் இறங்கி பணியாற்றி பல்வேறு உதவிகளை செய்தது மட்டுமின்றி 3 நாட்களில் வழக்கமான சகஜ நிலைக்கு திரும்பியது. நம்முடைய வடக்கு மாவட்டத்தின் சார்பிலும் சென்னையில் 185 186 வது வார்டு பகுதிகள் ஓதுக்கப்பட்டு 5000 குடும்பங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கினோம். சேலத்தில் நடைபெறும் இளைஞர் அணி மாநில மாநாட்டில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் தூத்துக்குடி கோவில்பட்டி விளாத்திகுளம் 3 தொகுதிகளிலிருந்தும் 3 ஆயிரம் பேர் சீருடையுடன் செல்வதற்கு வாகன வசதி தங்கும் இடம் வசதி அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை தவிர்த்து யார் வேண்டுமானாலும் வரலாம், அனைவரையும் அரவனைத்து அழைத்து செல்வோம். வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஓற்றுமையாக பணியாற்றி நாம் வெற்றி பெற உழைக்க வேண்டும். என்று பேசினார்.
கூட்டத்தில் மிக்ஜாம் புயலால் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவில் பெரும் மழைபெய்து சென்னை மட்டுமல்லாது திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஆகிய மாவட்டங்களிலும் பெரும் பாதிப்புக்குள்ளானது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெள்ளம் பாதித்த பகுதிகளில் போர்கால அடிப்படையில் முடிக்கிவிட்டதோடு மட்டுமல்லாது பாதித்த பகுதிகளில் ஒவ்வொன்றிற்கும் ஓரு ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமைத்து அவர்களோடு அமைச்சர்கள் எம்.எல்.ஏக்கள் மாமன்ற உறுப்பினர்கள் கழக தோழர்கள் ஓருங்கிணைந்து பாதிக்கப்பட்ட மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்தும் வெள்ளநீரை உடனடியாக வெளியேற்றவும் நடவடிக்கை எடுத்தார். தமிழக அரசின் நடவடிக்கைகளை மத்திய அரசின் சார்பில் வருகை தந்த ஆய்வு குழுவினரை பாராட்டி தெரிவித்துள்ளனர். போர்கால அடிப்படையில் செயல்பட்டு மக்களை காத்த தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறது. அதே போல் திமுக மாநில இளைஞர் அணி செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது. 1960ம் ஆண்டு இறுதியில் தலைவர் மு.க.ஸ்டாலின் கோபாலபுரம் இளைஞர் திமுக என்ற அமைப்பை ஆரம்பித்து அதன் மூலம் பல்வேறு தலைவர்களை அழைத்து நிகழ்ச்சிகள் நடத்தி வந்தார். அதன்பின் 1980ம் ஆண்டு ஜுலை 20ம் தேதி மதுரை ஜான்சிராணி பூங்காவில் திமுக இளைஞர் அணி முறைப்படி தொடங்கப்பட்டது. 1983ம் ஆண்டு இளைஞர் அணியின் மாநில செயலாளராக மு.க.ஸ்டாலின நியமிக்கப்பட்டார். அன்றைய காலக்கட்டத்தில் ஊர் ஊராக சென்று கழக கொடியேற்றும் நிகழ்ச்சி கழகத் தோழர்களின் இல்ல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அதன் மூலம் வசூல் செய்த நன்கொடை தொகை 11லட்சத்தை அன்றைய தலைவர் கலைஞரிடம் கொடுத்து இளைஞர் அணி அலுவலக பயன்பாட்டிற்காக கழகத்திற்கு சொந்தமான அன்பகத்தை பெற்றார். 2007ம் ஆண்டு இளைஞர் அணியின் முதல் மாநில மாநாட்டை தலைவர் கலைஞர் ஓப்புதலோடும் நெல்லையில் நடத்தினார். இந்த மாநாட்டிற்கு கலைஞர் இளைஞர் அணிகளுக்கு வழிவிடுவோம் எனும் தலைப்பில் 25 கடிதங்களை அதுவும் கழகம் வளர்ந்த வரலாறு அதில் ஏற்பட்ட இன்ப துன்ப நிகழ்ச்சிகளை பட்டியலிட்டு எழுதினார். இறுதியில் மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது. தமிழக முதல்வர் ஸ்டாலின் 34 ஆண்டுகள் இளைஞர் அணி செயலாளராக இருந்து வந்தார். பின்பு 2019ம் ஆண்டு இளைஞர் அணி செயலாளராக உதயநிதிஸ்டாலின் பொறுப்பேற்றார்கள். அவரும் தன்னுடைய தந்தையார் வழியில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் நேரில் சென்று இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் கழக கொடியேற்று விழா இல்ல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதோடு மட்;டுமல்லாது தான் கலந்து கொள்ளும் அனைத்து ஊர்களிலும் கழகத்தின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியை தவறாது நடத்தி வருகிறார். திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் ஓப்புதலோடு மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 2வது மாநில மாநாட்டை டிசம்பர் 24ல் சேலத்தில் நடத்த இருக்கிறார். அதற்காக இளைஞர் அணி தோழர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஓட்டு மொத்த இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் சேலத்தில் நடைபெற்றும் இளைஞர் அணி மாநாட்டிற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் பல்லாயிரக்கணக்கான இளைஞர் அணி தம்பிமார்கள் இளைஞர் அணி சீருடையுடன் பங்கேற்று மாநாட்டிற்கு பெருமை சேர்த்திடவும் அதற்கான ஏற்பாடுகளை கழக நிர்வாகிகள் செய்திடவும் கேட்டுக்கொள்வது. 3 தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல்கள் சரிபார்க்கும் பணியை விரைவாக முடித்து திமுக தலைமை கழகம் அறிவுரைக்கு ஏற்ப மாவட்ட கழகத்தில் ஓப்படைக்க வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் உள்ள குடும்பங்களுக்கு ரூ6000 வழங்கிடவும் பாதிப்படைந்த விவசாயிகளுக்கும் நிவாரண தொகை வழங்கிடவும் உத்தரவிட்ட முதலமைச்சர் இக்கூட்டம் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது. என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கூட்டத்தில் மாவட்ட துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஏஞ்சலா, பொருளாளர் ரவீந்திரன், துணை மேயர் ஜெனிட்டா, கோவில்பட்டி ஊராட்சி ஓன்றிய குழு தலைவர் கஸ்தூரி, நகர்மன்ற தலைவர் கருணாநிதி, எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி, புதூர் பேரூராட்சி மன்ற தலைவர் வனிதா, மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ஐயாத்துரைபாண்டியன், மாநகராட்சி மண்டலத்தலைவர் கலைச்செல்வி, மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ், துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, பொதுக்குழு உறுப்பினர்கள் கஸ்தூரிதங்கம், இராஜா, ராமர், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஜான் அலெக்ஸாண்டர், ராதாகிருஷ்ணன், ன்றிய செயலாளர்கள்;, முருகேசன், சின்னப்பாண்டியன், ராதாகிருஷ்ணன், காசிவிஸ்வநாதன், மும்மூர்த்தி, செல்வராஜ், சின்னமாரிமுத்து, நவநீதகண்ணன், அன்புராஜன், ராமசுப்பு, ராதாகிருஷ்ணன், பேரூர் செயலாளர்கள் வேல்சாமி, பாரதிகணேசன், சுரேஷ்கண்ணன், மருதுபாண்டி, மாவட்ட அணி அமைப்பாளர்கள் வக்கீல் பாலகுருசாமி, அந்தோணி ஸ்டாலின், மதியழகன், அன்பழகன், வக்கீல் குபேர்இளம்பரிதி, கவிதாதேவி, ரமேஷ், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் பிரதீப், பிரபு, அருணாதேவி, பகுதி செயலாளர்கள் நிர்மல்ராஜ், மேகநாதன், ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மாநகர அணி அமைப்பாளர் முருகஇசக்கி, துணை அமைப்பாளர் ரவி, கவுன்சிலர் ஜெயசீலி, பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சூர்யா, மற்றும் கருணா, மணி, பிரபாகர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

