தூத்துக்குடி,
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதி நுகர்வோர்கள் நலனை கருத்தில் கொண்டு பழைய மின்மாற்றிகளை அப்புறப்படுத்தி புதிய மின்மாற்றிகளை அமைத்து கூடுதல் மின் விநியோகம் மக்கள் நலன் கருதி அமைக்க வேண்டும் என மாப்பிள்ளையூரணியில் நடைபெற்ற மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும், தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளருமான சரவணக்குமார் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்திருந்தார்.
அதன்படி, மாப்பிள்ளையூரணி பகுதியில் சில பணிகள் நடைபெற்றுள்ள நிலையில், தூத்துக்குடி பிரிவுக்குப்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி காமராஜ் நகர் ஆ.சண்முகபுரம் பகுதியில் பொதுமக்கள் பயன்பெரும் வகையில் புதிய மின் மாற்றிகள் துவக்கி வைக்கும் நிகழ்ச்சிக்கு மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தலைமை வகித்தார்.

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா மின்மாற்றியை துவக்கி வைத்து இனிப்புகள் வழங்கினார். மேலும் இரு இடங்களில் 280 மின் நுகர்வோர்கள் பயன்பெறும் வகையில் சுமார் ரூ.25.30 லட்சம் மதிப்பீட்டில் 100 கே.வி.ஏ மற்றும் 63 கே.வி.ஏ மின் மாற்றிகள் துவக்கி வைக்கப்பட்டன.
நிகழ்ச்சியில், தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளரும் ஊராட்சி மன்ற உறுப்பினருமான ஸ்டாலின், தெற்கு மாவட்ட திமுக மாணவரணி துணை அமைப்பாளரும் ஊராட்சி மன்ற உறுப்பினருமான தங்க மாரிமுத்து, ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, தெற்கு மாவட்ட திமுக மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஆரோக்கியமேரி, ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் ஜெஸிந்தா, மாவட்ட பிரதிநிதி தர்மலிங்கம், பகுதி செயலாளர் சிவக்குமார், திமுக ஒன்றிய அவைத்தலைவர் ஜோதிடர் முருகன், திமுக கிளைச் செயலாளர்கள் சேகர், பிரபாகர், முருகன், மகாராஜா, சந்திரசேகர், கதிர்வேல், கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சங்கரன், மின்வாரிய செயற்பொறியாளர் ராம்குமார், உதவி செயற்பொறியாளர்கள் பிரேம்குமார், சாய் மங்களராணி, மின்வாரிய அலுவலர்கள் வாசு, பூவுடையார், மகளிரணி சண்முகத்தாய், திமுக நிர்வாகி ஜெயசிங், கௌதம், கம்யூனிஸ்ட் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

