தூத்துக்குடி
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி முழுவதும் ஒவ்வொரு பகுதியாக பொதுமக்களின் குறைகளை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார்.
அதன்படி தூத்துக்குடி மாநகராட்சி 52வது வார்டுக்குட்பட்ட முத்தையாபுரம் கனி பார்க்கிங் பகுதியில் மக்கள் குறை கேட்பு நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது புதியசாலை வசதி அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
பின்னர் பொதுமக்களிடம் அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் மக்களுக்கு தேவையான அடிப்படை பணிகள் அனைத்தும் 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் முறையாக நடைபெறாமல் இருந்ததால் பல்வேறு குறைபாடுகள் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. அதை முழுமையாக அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி அனைத்து குறைகளையும் முழுமையாக நிறைவேற்றி தருவேன், இந்த பகுதிக்கு திமுக ஆட்சி வந்த பிறகு புதிய தார்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. விடுபட்ட பகுதிக்கும் முழுமையாக சாலை கால்வாய், வசதிகள் அமைத்து தரப்படும் குடிதண்ணீர் சீரான முறையில் வழங்கப்பட்டு வருகிறது எந்த குறைபாடுகள் இருந்தாலும் அதை முழுமையாக செய்து தருவேன் என்று உத்தரவாதம் அளித்தார்.
நிகழ்ச்சியில் உதவி ஆணையாளர் சந்திரமோகன், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டலத்தலைவர் வக்கீல் பாலகுருசாமி, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், பகுதி செயலாளர் மேகநாதன், மாநகர மகளிரணி அமைப்பாளர் ஜெயக்கனி, கவுன்சிலர்கள் முத்துவேல், ராஜதுரை, விஜயகுமார், வட்ட செயலாளர் நடேசன் டேனியல், மற்றும் கருணா, பாஸ்கர், மணி, அல்பட், உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

