தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி முழுவதும் ஒவ்வொரு பகுதியாக பொதுமக்களின் குறைகளை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார்.
அதன்படி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 45வது வார்டு லெவிஞ்சிபுரம் பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து அப்பகுதியில் ஆய்வு செய்தார். அப்போது புதியசாலை வசதி, கழிவுநீர் தேங்காதவாறு கால்வாய் வசதி, அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

பின்னர் பொதுமக்களிடம் அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில் மக்களுக்கு தேவையான அடிப்படை பணிகள் அனைத்தும் 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் முறையாக நடைபெறாமல் இருந்ததால் பல்வேறு குறைபாடுகள் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. அதை முழுமையாக அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி அனைத்து குறைகளையும் முழுமையாக நிறைவேற்றி தருவேன், இந்த பகுதிக்கு திமுக ஆட்சி வந்த பிறகு புதிய தார்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. விடுபட்ட பகுதிக்கும் முழுமையாக சாலை கால்வாய், வசதிகள் அமைத்து தரப்படும் குடிதண்ணீர் சீரான முறையில் வழங்கப்பட்டு வருகிறது எந்த குறைபாடுகள் இருந்தாலும் அதை முழுமையாக செய்து தருவேன் என்று உத்தரவாதம் அளித்தார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி பொறியாளர் சரவணன், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளரும் கவுன்சிலருமான ராமகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், வட்டச்செயலாளர் சுரேஷ், வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கர், ரஜினிமுருகன், மற்றும் நடராஜன், மணி, அல்பட், உள்பட பலர் உடனிருந்தனர்.

