தூத்துக்குடி மாநகரில் அமைந்துள்ள தெப்பக்குளத்தில் கோடையிலும் நீர் நிறைந்து காணப்பட்டாலும் சுகாதாரமாக இல்லாமல் இருப்பதாகவும் மீன்கள் அடிக்கடி செத்து மிதப்பதாக பொதுமக்கள் கூறினார்கள்.

இதனையடுத்து மேயர் ஜெகன் பெரியசாமி அந்த குளத்தை பார்வையிட்டு தெப்பக்குளம் கரையை சுற்றிலும் பேவர்பிளாக் கற்களும் வண்ண விளக்குகளும் உட்காருவதற்கான இருக்கைகளும் அமைக்கப்படும் மற்றும் குளத்தின் நீரை சுத்தப்படுத்துவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை மீன்வளக் கல்லூரியின் அலுவலர்கள் மூலம் என்ன செய்யலாம் என்று கேட்டு குளத்தின் நடுவிலோ அல்லது ஓரத்திலோ செயற்கை நீருற்று மற்றும் மினி ஹைமாஸ் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
உடன் பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ரவீந்திரன், கவுன்சிலர்கள் கீதா முருகேசன், முத்துவேல் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் உடனிருந்தனர்.

