தூத்துக்குடி
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி 68 குக்கிராமங்களை உள்ளடக்கி ஒன்றரை லட்சம் ஜனத்தொகையை கொண்ட 40 ஆயிரம் வாக்காளர்களை கொண்ட மிகப்பெரிய ஊராட்;சியாக இருந்து வருகிறது. மக்கள் ஜனத்தொகைக்கு ஏற்ப கட்டமைப்பு பணிகளை ஊராட்;சி நிர்வாகம் செய்து வருகிறது.
குடிதண்ணீர் முறையாக விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில் அதில் பாதிப்புகள் ஏதும் வராதவாறு இருக்க வேண்டியும் குடியிருப்பவர்களின் வீடுகளுக்கு புதிதாக குடிநீர் இணைப்பு வழங்குவது சம்பந்தமாக ளதெற்கு மாவட்;ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவர்நலன் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படி மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்ற பிளம்பர்கள் ஆலோசனை கூட்டத்தில் சரவணக்குமார் பேசுகையில் ஊராட்சிக்குட்பட்ட பிளம்பர்கள் பொதுமக்களின் முக்கிய வாழ்வாதாரமாக இருக்க கூடிய குடிதண்ணீர் எல்லா பகுதிக்கும் தடையின்றி செல்ல வேண்டும் சிறு சிறு குறைபாடுகளை உடனடியாக எனது கவனத்திற்கு கொண்டு வந்து அதை விரைவாக தீர்த்து வைக்க வேண்டும் பொதுமக்கள் நலன் தான் நமக்கு முக்கியம் என்ற கடமை உணர்வு எல்லோருக்கும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

