• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட திமுக மாணவர் அணியினர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் வாழ்த்து பெற்றனர்.

policeseithitv by policeseithitv
August 11, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட திமுக மாணவர் அணியினர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் வாழ்த்து பெற்றனர்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட திமுக மாணவர் அணியினர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் வாழ்த்து பெற்றனர்.

தூத்துக்குடி திராவிட முன்னேற்ற கழகத்தின் 15-வது கழக தேர்தல் முறையாக மாநிலம் முழுவதும் தேர்தல் ஆணையம் வழிமுறைக்கு இணங்க தேர்தல் நடைபெற்று கிளை செயலாளர் முதல் மாவட்ட செயலாளர் வரை முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். திமுக தலைவராக முதலமைச்சர் ஸ்டாலின், பொதுச்செயலாளராக அமைச்சர் துரைமுருகன், பொருளாளராக பாலு, துணை பொதுச்செயலாளராக கனிமொழி எம்.பி உள்ளிட்ட உயர்மட்ட முக்கிய நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அதன்பின் திமுகவின் கட்டமைப்பு படி 23 அணிகள் முறையாக செயல்படுகின்றன. அதற்கும், மாநில, மாவட்ட, ஒன்றிய அளவில் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், மாநில இளைஞரணி செயலாளரும், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் இளைஞரணி பொறுப்பை வழிநடத்தி 5ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். திமுகவில் பல்வேறு அணிகள் இருந்தாலும் முதன்மை அணியாக செயல்படுவது இளைஞர் அணி தான். திமுக கட்சியின் கொள்கைகளை தீவிரமாக அனைத்து தரப்பு மக்களுக்கும் எடுத்துச் செல்லும் பொறுப்பில் இளைஞர் அணி நிர்வாகிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இது கடந்த காலத்தில் ஸ்டாலின் இருந்த காலம் தொட்டு இன்று வரை தொடர்கிறது.

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத்திலும் மாணவர் அணி பொறுப்புக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் நேர்காணல் நடத்தப்பட்டு, திமுக ஆட்சியில் இல்லாத 10 ஆண்டுகள் தொடர்ந்து திமுகவில் பணியாற்றியதையும், கழகம் அறிவித்த போராட்டங்களில் பங்கெடுத்துக் கொண்ட விவரத்தையும் கேட்டறிந்து, குறிப்பாக அவர்களில் தீவிர களப்பணி ஆற்றுபவர்கள் யார் என்பதை கண்டறிந்தார். அதில் துடிப்புடன் செயல்படும் மாணவரணி நிர்வாகிகள் பட்டியலை சில தினங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.

இதன்படி தூத்துக்குடி தெற்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளராக மாவட்ட கவுன்சிலர் அருண்குமார், துணை அமைப்பாளர்களாக பிரவின், காட்வின்ராஜா, பிரஷாந்த், தங்கமாரிமுத்து, ஆகியோர் நியமணம் செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவர்நலன் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அப்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன கூறுகையில் தமிழக முதலமைச்சர் தளபதியார் ஆட்சியில் செய்த சாதனைகளையும் திட்டங்களையும் மாநில வளர்ச்சி பணிகளையும் அனைத்து தரப்பினர்கள் மத்தியிலும் கொண்டு போய் சேர்க்க வேண்டும். 2024ல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மாணவர் அணியின் பங்கு அதிகம் இருக்க வேண்டும் அதிக உறுப்பினர்களை சேர்த்து மற்ற மாவட்டங்களை காட்டிலும் நமது மாவட்டம் முன்னோடி மாவட்டமாக திகழ்வதற்கு ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரிசங்கர், தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், மற்றும் வக்கீல் கிருபாகரன், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Previous Post

தமிழக முதலமைச்சர் ஸ்டாலினிடம் திமுக மாநில நிர்வாகி வாழ்த்துப் பெற்றார்

Next Post

போதையில்லாத மாநிலம் உருவாக அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார்

Next Post
போதையில்லாத மாநிலம் உருவாக அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்  மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார்

போதையில்லாத மாநிலம் உருவாக அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In