நாகப்பட்டினம் ஆகஸ்ட் 9
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஏ.டி.எம். தனியார் மகளிர் கல்லூரியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு (மகளிர் திட்டம்) சார்பில் கல்லூரி சந்தை நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ் 09.08.2023 குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் ரஞ்சித்சிங் உள்ளார்.
ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் பல்வேறு திட்டங்களில் கல்லூரி சந்தை முக்கிய பங்கு வைக்கிறது. இந்த கல்லூரி சந்தையின் நோக்கமே, உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு வரும் மகளிர் சுய உதவி குழுக்களை மேம்படுத்தி, உற்பத்தி பொருட்களை ஒவ்வொரு கல்லூரிகளும் மாணவ மாணவியர்களுக்கு அறிமுகப்படுத்தி விற்பனையை அதிகரித்து அவர்களின் வாழ்வாதாரத்தினை முன்னேற்றம் அடைய செய்வதாகும்.
மேலும் கல்லூரி மாணவர்களிடையே மகளிர் சுய உதவி குழுவினரின் உற்பத்தி பொருட்களை பிரபலப்படுத்தி பேக்கிங், டிசைன், லேபிள் போன்ற மதிப்பு கூட்டுதல் நடவடிக்கைகளில் மேன்மை அடைய முடியும் அதோடு மட்டுமல்லாமல் கல்லூரியில் மேலாண்மையில் படிக்கும் மாணவ மாணவிகளை குழுக்களாக பிரித்து அவர்களிடம் சுய உதவி குழுவினரின் உற்பத்தி பொருட்களை வழங்கி அப்பொருள்களில் உறையிடுதல், விலையிடுதல், குறைந்த விலையில் தரமான மூலப்பொருள்கள் கிடைக்கும் இடங்கள் மற்றும் மதிப்பு கூட்டு பொருள்கள் போன்ற பல்வேறு விபரங்களை ஆய்வு செய்து, திட்ட அறிக்கையாக சமர்ப்பித்து அதன் மூலம் குழு உற்பத்தி பொருட்களின் தரத்தையும், வாடிக்கையாளர்கள் விரும்பும் வடிவமைப்பையும் மேம்படுத்துவது கல்லூரி சந்தையின் முக்கிய நோக்கமாகும்.
மேலும் இதன் மூலம் மாணவ-மாணவியர்களை தொழில் முனைவோர்களாக மாற்றுவதே முக்கிய நோக்கம். இக்கல்லூரி சந்தையில் நமது மாவட்ட மற்றும் பிற மாவட்ட ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்க உற்பத்தி பொருட்கள் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் உற்பத்தி பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது
இந்த கல்லூரி சந்தையில் மகளிர் சுயஉதவிக் குழுவினரால் தயாரிக்கப்பட்ட பொம்மைகள், சணல் பைகள், செயற்கை ஆபரண பொருட்கள், இயற்கை மூலிகைப் பொருட்கள் போன்றவைகள் இடம் பெற்றுயிருந்தன. இச்சந்தை இன்று முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும்.
இந்நிகழ்ச்சியில் உதவி திட்ட அலுவலர்கள் காமராஜ், முருகேசன், டி.வேல், ஏ.டி.எம். மகளிர் கல்லூரி முதல்வர் ஆர்.அன்புசெல்வி, கல்லூரி ஆசிரியைகள், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

