நாகப்பட்டினம் மாவட்டம் நகராட்சி பெண்கள் மேல்நிலை நடைபெற்ற மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் விழாவில் மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டிகளை சட்டத்துறை (சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை, ஊழல் தடுப்புச் சட்டம்) அமைச்சர் எஸ்.ரகுபதி 08.08.2023 வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் தாட்கோ கழக தலைவர் உ.மதிவாணன் ஆகியோர் உடன் உள்ளனர்.
நாகப்பட்டினம் ஆகஸ்ட் 8
நாகப்பட்டினம் மாவட்டம், நாகப்பட்டினம் நகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் விழாவில் மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டிகளை சட்டத்துறை (சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை, ஊழல் தடுப்புச் சட்டம்) அமைச்சர் எஸ்.ரகுபதி 08.08.2023 வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன், தாட்கோ கழக தலைவர் உ.மதிவாணன் , நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷா நாவஸ் ஆகியோர் உடன் உள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளி மாணவர்களின் நலனை கருதிற்கொண்டு பல்வேறு நல்லதிட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். அவற்றில் நாகப்பட்டினம் மாவட்டம் நகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவ மாணவிகளுக்கு 2022 – 2023 ஆம் கல்வி ஆண்டிற்கு மாணவர்களுக்கு 2709 மிதிவண்டிகளும், மாணவிகளுக்கு 3320 மிதிவண்டிகளும் வழங்கப்பட்டது. ஆண் மிதிவண்டியின் விலை ரூ.4,900-, பெண் மிதிவண்டியின் விலை ரூ.4,760- மொத்தம் ரூ.2,90,77,300- மதிப்பிட்டிலான 6029 மிதிவண்டிகள் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் நான் முதல்வன் என்ற மாணவர்களின் உயர்கல்விக்கான திட்டமிடுதல் சார்ந்து நான் முதல்வன் என்ற திட்டம், குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காக இல்லம் தேடி கல்வி திட்டம் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2414 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 36169 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். மேலும், மாவட்டங்களில் கல்வித்தரத்தை மேம்படுத்தவும், பள்ளியின் சுற்றுச்சூழல் மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் மாணவர்கள் பயமின்றி தேர்வினை எதிர்கொள்ளவும், தேர்ச்சி சதவீதத்தை அதிகப்படுத்தவும் பள்ளிக்கல்வி துறையின் வாயிலாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு போதை பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுகாதாரத்துறை, சமூக நலத்துறை, காவல்துறை, குழந்தைகள் நலன் மற்றும் மேம்பாட்டு துறை ஆகியோர் அடங்கிய குழு ஏற்படுத்தப்பட்டு போதை பழக்கத்தின் தீமையினை உணர்த்தும் வண்ணம் பல்வேறு போட்டிகள் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றுவருகின்றன.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2022- 2023 ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற தேசிய வருவாய்வழி மற்றும் படிப்பு உதவித்தொகை தேர்வில் 61 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வருமானம் ஈட்டும் தாய் தந்தையர் விபத்தில் இறந்தால் அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ அக்குடும்பத்தை சார்ந்த மாணவர்களுக்கு 01 முதல் 12 ஆம் வகுப்பு வரை வழங்கப்படும் நிதி ரூபாய். 50,000- மற்றும் 75,000- ஆகும். இதுவரை மாவட்டத்தில் இத்திட்டத்தின் மூலம் 125 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 2 ஆம் கட்டமாக விண்ணப்பித்த மாணவியர்களில் 1017 விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 19 தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டுவதில் 1252 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்க சிறப்பு ஊக்கத்தொகை 53 பள்ளிகளில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு முறையே தலா ரூ.1,500- மற்றும் ரூ.2,000- வீதம் தொகை வழங்கப்பட்டுவருகிறது. என சட்டத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து 01.09.2023 முதல் 11.09.2023 வரை நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள புத்தகத் திருவிழாவில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தனது சொந்த சேமிப்புத் தொகையிலிருந்து புத்தகங்களை வாங்கி வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் பொருட்டு முதல் கட்டமாக 25 பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் பள்ளி மாணவர்களுக்கு சேமிப்பு உண்டியல் வழங்கும் திட்டத்தினை சட்டத்துறை (சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை, ஊழல் தடுப்புச் சட்டம்) அமைச்சர் எஸ்.ரகுபதி துவக்கி வைத்தார்.
இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் வி.ஷகிலா மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் ரஞ்சித்சிங், சார் ஆட்சியர் பானோத் ம்ருகேந்தர் லால், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் எம்.கே.சி. சுபாஷினி நாகப்பட்டினம் நகரமன்ற தலைவர் இரா.மாரிமுத்து நகர மன்ற உறுப்பினர்கள் ஜி. சத்தியவாணி, டி. தமயந்தி, மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) (பொ) சி. கார்த்திகேசன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

