நாகப்பட்டினம் ஜூலை 13
சென்னை தலைமை செயலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று
காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாட்டில் 45 தொழிற்பயிற்ச்சி நிலையங்களில்
ஒன்றான நாகப்பட்டினம் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாகப்பட்டினம், செம்போடை,
திருக்குவளை ஆகிய தொழிற்பயிற்சி நிலையங்களில் 4.0 தரத்திலான தொழில்நுட்ப மைய
கட்டடங்களை
திறந்து வைக்கப்பட்டதனை, தொடர்ந்து நாகப்பட்டினம் அரசு தொழில் பயிற்சி
நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ்
தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் என்.கௌதமன் தமிழ்நாடு தாட்கோ
கழக தலைவர் உ.மதிவாணன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி பார்வையிட்டனா ர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாணவர்களின்
நலனை கருத்தில்
கொண்டு பல்வேறு திட்டங்களையும், பல்வேறு நலத்திட்ட உதவிகளையும்; வழங்கி
வருவதனை, தொடர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 2021-2022 ஆம் நிதி
ஆண்டில் 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 4.0 தரத்திலான தொழில்நுட்ப மையங்கள்
அமைக்க ரூ.2,877.43 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதில் ரூ.264.83 கோடி கட்டட
பணிகளுக்கு வழங்கப்பட்டது. முதற்கட்டமாக 05.09.2022 அன்று கட்டடப்பணி தொடங்கப்பட்டு,
22 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில ; தொழில் 4.0 தரத்திலான தொழில்நுட்ப மையங்கள ;
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 08.06.2023 அன்று துவங்கப்பட்டன.
தற்போது இரண்டாவது கட்டமாக 45 தொழிற்பயிற்சி நிலையங்களில் காணொளி காட்சி
வாயிலாக 13.07.2023 இன்று காலை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து
வைக்கப்பட்டுள்ளது. இந்த 45 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ஒன்றான நாகப்பட்டினம்
அரசு தொழில் பயிற்சி நிலைய வளாகத்தில் அமைந்துள்ள தொழில் 4.0 தரத்திலான
தொழில்நுட்ப மையத்தில் புதிதாக நான்கு தொழில் பிரிவுகள் தொடங்கப்பட உள்ளது. இந்த புதிய
தொழில் பிரிவுகள் மூலம் ஒவ்வொரு வருடமும்; 128 பயிற்சியாளர்கள் பயனடைவார்கள்
இந்த விழாவில் நாகப்பட்டினம் நகர மன்ற தலைவர் இரா.மாரிமுத்து
அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ஜெயமூர்த்தி, வட்டாட்சியர் ராஜசேகர்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள்
கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

