தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் உள்ள பூங்கா இடங்களை பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அதை மாநகராட்சி வசம் சம்பந்தப்பட்டவர்கள் ஒப்படைக்க வேண்டும். என்று பலமுறை வேண்டுகோள் விடப்பட்டிருந்தது. மாநகராட்சி கூட்டத்திலும் மாநகராட்சிக்குரிய இடத்தை மாமன்ற உறுப்பினர்கள் அடையாளம் காட்டவேண்டும் அதை மீட்பதற்கும் ஒத்துழைக்க வேண்டும், என்று பலமுறை கூட்ட நேரத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
அதன்படி மாநகராட்சி பகுதியில் மில்லர்புரம், உப்பாத்துஓடை, தாளமுத்துநகர், புஷ்பாநகர் உள்பட பல இடங்களில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன. பல இடங்கள் கண்டறியப்பட்டு முறையாக மீட்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ராம்நகரில் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்ட மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் மாநகராட்சி சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 100வது பிறந்தநாளையொட்டி பல்வேறு வகையான 300 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, மண்டலத்தலைவர்கள் கலைச்செல்வி, நிர்மல்ராஜ், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச்செயலாளர் ஆறுமுகம், மாநகராட்சி நகர்நல அலுவலர் சுமதி, மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், சிறுபான்மை பிரிவு துணைச்செயலாளர் அந்தோணி, கவுன்சிலர்கள் சுப்புலட்சுமி, ரெங்கசாமி, வைதேகி, மரியகீதா, ஜெபஸ்டின் சுதா, மகேஸ்வரி, விஜயலட்சுமி, ஜெயசீலி, பவாணி மார்ஷல், முன்னாள் கவுன்சிலரும் வட்டச்செயலாளர் ரவீந்திரன், உதவி செயற்பொறியாளர்கள் பிரின்ஸ், ராஜேந்திரன், சுகாதார ஆய்வாளர்க் ஹரிகணேஷ், ஸ்டாலின் பாக்கியநாதன், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், மற்றும் பிரபாகர், ஜோஸ்பர், லிங்கராஜா, குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பாகஸ்: தூய்மை உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். என் நகரம் என் பெருமை என்நகரத்தை தூய்மையாகவும் சுத்தமாகவும் வைத்திருப்பது எனது கடமையும் பொறுப்பும் ஆகும். பொது இடங்களில் குப்பை கொட்டாமல் இருப்பது நகரத்தூய்மைக்கான முதல்காரணம் என்பதை நான் நம்புகிறேன். தூய்மை பணிகளுக்கு என்னை அர்ப்பணித்துக்கொள்ள என் நேரத்தை ஓதுக்குவேன். நான் பொது இடங்களில் குப்பை கொட்டமாட்டேன், பிறரையும் குப்பை கொட்ட அனுமதிக்க மாட்டேன், குப்பையை வீட்டிலேயே பிரித்து தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைப்பேன், தூய்மை நகருக்கான என் முயற்சியில் நான் பங்கேற்பதுடன், என் குடும்பத்தாரையும் சுற்றத்தாரையும் முழு ஆர்வத்துடன் பங்கேற்க ஊக்குவிப்பேன், என்னால் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு நடவடிக்கையும் என் நகரத்தை தூய்மையாக வைக்க பேரூதவி செய்யும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். என்று மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

