தூத்துக்குடி
மாநில திமுக இளைஞரணி செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின அறிவிப்பின்படியும், தெற்கு மாவட்ட செயலாளரும் அமைச்சரும் மீன்வளம் மற்றம் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனைப்படியும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இரண்டாண்டு கால திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் கருங்குளம் வடக்கு ஒன்றியம் முறப்பநாடு, கோவில்பத்து ஊராட்சியில் நடைபெற்றது.
தெருமுனை பிரச்சாரத்தில் சண்முகையா எம்.எல்.ஏ, கொள்கைபரப்பு துணைச்செயலாளர் கரூர் முரளி, தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம் உள்பட பலர் பேசினார்கள்.
கூட்டத்தில் கருங்குளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராமசாமி, பொதுக்குழு உறுப்பினர் செந்தில், கருங்குளம் வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மாசிலாமணி, சுப்புராஜ், சண்முகசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

