தூத்துக்குடி பழமையான பிரதிபெற்ற பாகம்பிரியாள் அம்பிகை உடனுறை சங்கரராமேஸ்வரர் சிவன்கோவில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. சிவன்கோவிலில் சித்திரைத் பெருந்திருவிழா பக்தர்களால் வெகுசிறப்பாக நடைபெற்று முடிந்த நிலையில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு உலக அமைதிக்காவும் நோய்நொடி இல்லாமல், செல்வவளம், விவசாயநலன், மழைவளம், ஆகியவற்றை வேண்டி சிறப்பு பஜனையுடன் 504 மாவிளக்கு பூஜை கோவில் தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர் தலைமையில் நடைபெற்றது. பூஜை முடிவில் குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்பட்டது.
மாவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் தமிழ்செல்வி, முன்னாள் கவுன்சிலர்கள் கோட்டுராஜா, கந்தசாமி, ராதாகிருஷ்ணன், செந்தில்குமார், பிரதோஷகமிட்டி தலைவர் ஆறுமுகம், சாந்தி, நெல்லையப்பன், செல்வம், கோவில் கணக்கர் சுப்பையா, மற்றும் கோவில் நிர்வாகத்தினர், மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

