• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் புத்தக திருவிழா நெய்தல் கலைநிகழ்ச்சி தொடங்குகிறது. கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி பங்ககேற்பு

policeseithitv by policeseithitv
April 28, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் புத்தக திருவிழா  நெய்தல் கலைநிகழ்ச்சி தொடங்குகிறது. கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி பங்ககேற்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி புத்தக திருவிழா மற்றும் நெய்தல் விழா ஆகிய நிகழ்ச்சிகள் சங்கரபேரி விலக்கு சந்திப்பு பகுதியில் கடந்த 21ம் தேதி ஆரம்பிக்கப்பட்டு நேற்று 7ம் நாள் நிகழ்ச்சிக்கு கனிமொழி எம்.பி தலைமை வகித்தார். மகாலட்சுமி மகளிர் கல்லூரி மாணவ மாணவிகளின் கண்கவர் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

சாதித்திய அகாடமி விருதாளர் எழுத்தாளர் ஜோடிகுரூஸ் பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன், யூடுப்பர் தர்மதுரை, ஆகியோர் ஓவ்வொரு தலைப்புகளிலும் பேசினார்கள்.

அதில் சாதித்திய அகாடமி விருதாளர் எழுத்தாளர் ஜோடிகுரூஸ் பேசுகையில் தூத்துக்குடி என்று இருக்கும் பெயருக்கு மற்றொரு பெயரும் உண்டு திருமந்திரநகர் அதே போல் கடல் வாணிபம் பெருகி உலகளவில் பெரிய துறைமுகமாக வளர்ச்சியடைந்ததற்கு யார் காரணம் என்பதை இப்போது உள்ளவர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். காலம் கடந்த பல நிகழ்வுகள் இன்றைய காலக்கட்டத்தில் தேவைப்படுகிறது மொழிப்பற்றும் நமக்கு அவசியம் என்றார்.

பூவுலகின் நண்பர் சுந்தர்ராஜன் பேசுகையில் எனக்கு தூத்துக்குடி மாவட்டத்தின் மீது கொஞ்சம் போராமை உண்டு. அதற்கு என்ன காரணம் என்றால் கனிமொழி எம்.பி இரண்டாவது முறையாக இந்த புத்தக திருவிழாவை நடத்துகிறார். மற்றொண்டு பாரளுமன்றத்தில் அவர் கேட்கும் பல கேள்விகளுக்கு அமைச்சரை பதில் சொல்ல வைக்கிறார். தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் இருந்த 21 தீவுகளில் தற்போது 19 தான் உள்ளன. 2034ம் ஆண்டு மேலும் 6 தீவுகள் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது. என்று ஆராய்;ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த நிலை தொடர்வது நல்லதல்ல. அதில் கவனம் செலுத்த வேண்டும். திராவிட மாடல் சமூகநீதி என்பதை யெல்லாம் கடைபிடிக்கும் இந்த காலக்கட்டத்தில் தமிழர்கள் இயற்கையை நேசிக்க வேண்டும். பேரன் பேத்திகள் வாழும் காலத்தில் நம் கடலையும் இயற்கை நலன் சார்ந்த வளங்களையும் பாதுகாக்க வேண்டும். என்று பேசினார்.

யூடுப்பர் தர்மதுரை பேசுகையில் தமிழகத்தில் இன்று வரை பல கிராமங்களில் சிலர் இடி மின்னல் மழை மூன்றையும் தெய்வமாக நினைத்து வணங்குகின்றனர். முந்தைய காலத்தில் இருந்த நவக்கிரகங்கள் வேறு தற்போது உள்ள நவக்கிரங்கள் வேறு அதே போல் விவசாயத்தை நாம் பாதுகாக்க வேண்டும். கடந்த காலங்களில் போலியோ உள்ளிட்ட பல்வேறு நோய்கள் தீர்க்க முடியாமல் இருந்தன. தற்போது அதற்கான தடுப்பூசிகள் கண்டுப்பிடிக்கப்பட்டு நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. பல பேரிழைப்புகளை நாம் சந்தித்துள்ளோம் அதையெல்லாம் ஆராய்ந்து வரும் காலங்களில் தடுக்கும் வகையில் அறிவியில் ஆராய்ச்சிகள் மூலம் கன்டறியப்பட வேண்டும் என்றார். பின்னர் பேச்சாளர்களுக்கு கனிமொழி எம்.பி நினைவு பரிசு வழங்கினார்.

விழாவில் அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் செந்தில்ராஜ், எம்.எல்.ஏக்கள் சண்முகையா, தமிழரசி, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் தினேஷ்குமார், வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், கலெக்டர் வளர்ச்சி தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், திமுக ஒன்றிய செயலாளர் சரவணக்குமார், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், மற்றும் கருணா, மணி, அல்பட், பிரபாகர், லிங்கராஜா, மகாலட்சுமி மகளிர் கல்லூரி நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் பேராசிரியர் சண்முகப்பிரியா ரத்னா,

உள்பட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். சப்கலெக்டர் கௌரவ்குமார் நன்றியுரையாற்றினார். தட்டப்பாறை சீர்திருத்த பள்ளி மாணவர்களின் சார்பில் பேண்ட வாத்தியத்தில் நாட்டுபண்னுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

பாக்ஸ்: தூத்துக்குடியில் நான்கு நாட்கள் நடைபெறும் நெய்தல் கலை விழா இன்று ஏப்ரல் 28-ம் தேதி தொடங்கியது. தூத்துக்குடி எட்டயபுரம் ரோடு சங்கரப்பேரி சாலை பிரிவு பகுதியில் உள்ள திடலில், இன்று ஏப்ரல் 28-ம் தேதி முதல் மே 1-ம் தேதி வரை நெய்தல் கலைத்திருவிழா நடைபெறுகிறது. 30-க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன, இதில் 500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்கவுள்ளனர்.

கலைத்திருவிழாவில் கலைகள் மட்டுமின்றி நமது பாரம்பரிய உணவு வகைகளையும் அறிந்துகொள்ளும் வகையில் 40 அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. திமுக துணைப் பொதுச் செயலாளர் மற்றும் தூத்துக்குடி கனிமொழி எம்.பியின் முன்னெடுப்பில் கடந்த ஆண்டு தூத்துக்குடியில் நெய்தல் என்ற பெயரில் பிரம்மாண்ட கலைத் திருவிழா நடைபெற்றது. மீனவர்கள் உள்ளிட்ட கடல்வாழ் மக்களின் வாழ்வியலை கலையாக வெளிப்படுத்திய இந்நிகழ்ச்சி தூத்துக்குடி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்தாண்டும் தூத்துக்குடியில் இரண்டாம் வருடமாக, நெய்தல் கலை விழா நடைபெறுகின்றன. கனிமொழி கருணாநிதி எம்.பி, விழாவிற்கான முன்னேற்பாடு பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக கனிமொழி தொடர்ந்து தூத்துக்குடியிலேயே முகாமிட்டு நெய்தல் திருவிழாவுக்கான பணிகளை நேரடியாக கவனித்து வருகிறார்.

நெய்தல் கலை விழா மற்றும் புத்தக கண்காட்சிக்கு மக்கள் சிரமப்படாமல் வந்து செல்வதற்கு வசதியாக தூத்துக்குடி பஸ் நிலையங்களில் இருந்து இலவசமாக பஸ் வசதி செய்யப்பட்டு உள்ளது. இதற்காக தனியாக பஸ் நிறுத்தமும் உருவாக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் அனைத்து பஸ்களும் புத்தக திருவிழா நடைபெறும் இடம் அருகே நின்று செல்லும்.

நெய்தல் கலை விழாவில் முதல் நாளில் இன்று தூத்துக்குடி இசைக் கல்லூரி கணேஷ்கா சிலம்பப் பயிற்சிப் பள்ளி, சகா கலைக்குழு, காஞ்சி கைச்சிலம்பாட்டக் கலைக்குழு, செவி இசைக்குழு – ஆதிமேளம், தேன்மொழி ராஜேந்திரன் கரகம், நையாண்டி மேளம், ஐந்திணை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Previous Post

தூத்துக்குடியில் வடக்கு தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி நேர்காணல் கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதாராதாகிருஷ்ணன் பங்கேற்பு

Next Post

மாப்பிள்ளையூரணி பகுதி மக்களின் கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றுவோம் கிராமசபை கூட்டத்தில் கனிமொழி எம்.பி பேச்சு

Next Post
மாப்பிள்ளையூரணி பகுதி மக்களின் கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றுவோம் கிராமசபை கூட்டத்தில் கனிமொழி எம்.பி பேச்சு

மாப்பிள்ளையூரணி பகுதி மக்களின் கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றுவோம் கிராமசபை கூட்டத்தில் கனிமொழி எம்.பி பேச்சு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In