தூத்துக்குடி
திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் உத்தரவுபடி கோடைகாலத்தை முன்னிட்டு வடக்கு மாவட்ட திமுக பகுதி முழுவதும் தண்ணீர்பந்தல் திறந்து வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 12வது வார்டு போல்பேட்டை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி, இளநீர், நீர்மோர், உள்ளிட் குளிர்பானங்களை வழங்கினார்கள்.
நிகழ்;ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ஜெயக்குமார், மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரி தங்கம், மாவட்ட பிரதிநிதிகள் செல்வகுமார், செந்தில்குமார், மாநகர துணைச்செயலாளர் பிரமிளா, கவுன்சிலர்கள் தெய்வேந்திரன், ஜான்சிராணி, அரசு வக்கீல் மாலா தேவி, வட்டச்செயலாளர் முனியசாமி, மற்றும் மணி, அல்பட், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

