நாகப்பட்டினம் மார்ச் 29
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் வட்டம் சின்னதும்பூர் கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.
இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நோக்கம் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதாகும். அந்தவகையில் தமிழக அரசானது பல்வேறு நலத்திட்டங்களை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தி வருகிறது. அரசு அறிவிக்கும் திட்டங்கள், உதவிகளை பெற அறிந்துகொள்ள முடியாத நிலையில் உள்ள மக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திக்கும் ஒரு நிகழ்ச்சியே மக்கள் நேர்காணல் முகாமாகும்.
இம்முகாமின் நோக்கம் அரசின் நலத்திட்டங்கள் அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும். தகுதியின் அடிப்படையில் நலத்திட்டங்கள் தகுதியானவர்களுக்கு கிடைக்க வேண்டும். இதுபோன்ற அரசின் நல திட்டங்கள் மற்றும் உதவிகளை அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் இம்முகாம் நடத்தப்படுகிறது. இந்த ஊராட்சியானது அனைத்துகிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் தேர்வாகியுள்ளது. இதுவரை நம் மாவட்டத்தில் புதியதாக 60 வகுப்பறை கட்டடங்களும், 10 நேரடி நெல்கொள்முதல் நிலையங்களும் கட்டப்பட்டுள்ளது. நம் மாவட்டத்தில் புதிய மாண்புமிகு முதலமைச்சரின் அனைத்துகிராம சாலை மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படவுள்ளன.
மேலும் 15 மான்ய நிதியின் கீழ் வீட்டிற்கு வீடு குடிநீர் இணைப்பு வழங்க பணிகள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருகிறது.
தொடர்ந்து பெற்றோர்கள் தங்களது குழந்தைகளான மகன் மற்றும் மகள் போதை பொருட்கள், தொடுதிரை செல்போன், இரு சக்கர வாகனங்கள் பயன்படுத்துவது போன்ற தவறான விஷயங்களில் ஈடுபடுவதை அவ்வப்போது கண்காணித்து, அறிவுரைகளை அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.
இம்முகாமில் வருவாய் துறை சார்பில் 55 பயனாளிகளுக்கு ரூ.29,97,500 மதிப்பீட்டில் இலவச வீட்டுமனை பட்டாவிற்கான ஆணைகளையும், சமூகப் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 18 பயனாளிகளுக்கு ரூ.18,500 மதிப்பீட்டிலும், வளர்ச்சித்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.24,00,000 மதிப்பீட்டில் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகளையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 04 பயனாளிகளுக்கு ரூ.24,000 மதிப்பீட்டில் தையல் இயந்திரம், பித்தளை தேய்ப்பு பெட்டியையும், தோட்டக்கலைத்துறை சார்பில் 05 பயனாளிகளுக்கு ரூ.8,150 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும், வேளாண்மைத்துறை சார்பில் 19 பயனாளிகளுக்கு ரூ.31,400 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும், மாற்றுத்திறனாளி நலத் துறை சார்பில் 07 பயனாளிகளுக்கு ரூ.1,75,000- மதிப்பீட்டில் வங்கி கடன் மான்யத்திற்கான காசோலையினையும், வட்ட வழங்கல் துறையின் சார்பில் 44 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளையும் என மொத்தம் 162 பயனாளிகளுக்கு சுமார் ரூ.56 இலட்சத்து 54 ஆயிரத்து 550 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வி;.ஷகிலா நாகப்பட்டினம் சார் ஆட்சியர் பானோத் ம்ருகேந்தர் லால் கீழ்வேளுர் ஒன்றிய குழு தலைவர் செல்வராணி ஞானசேகரன், வேளாங்கண்ணி பேரூராட்சி துணைதலைவர் ஆத்மா வட்டார குழுத்தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன், சின்னதும்பூர் ஊராட்சி மன்ற தலைவர் சுதா முருகானந்தம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெற்றிச்செல்வன், பாத்திமா ஆரோக்கிய மேரி, வட்டாட்சியர் இரமேஷ்குமார் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் உட்பட பொது மக்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

