நாகப்பட்டினம் மாவட்டம் பாப்பாகோவில் உள்ள சர் ஐசக் நியூட்டன் கல்லூரியில் உலக காசநோய் தினத்தினை முன்னிட்டு மாவட்ட காசநோய் மையம் சார்பில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் உலக காசநோய் தின விழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
நாகப்பட்டினம் மார்ச் 25
நாகப்பட்டினம் மாவட்டம் பாப்பாகோவில் உள்ள சர் ஐசக் நியூட்டன் கல்லூரியில் உலக காசநோய் தினத்தினை முன்னிட்டு மாவட்ட காசநோய் மையம் சார்பில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் உலக காசநோய் தின விழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் என்.கௌதமன் மாவட்ட ஊராட்சி தலைவர் ச.உமாமகேஸ்வரி நாகப்பட்டினம் நகர்மன்ற தலைவர் இரா.மாரிமுத்து ஆகியோர் உடன் உள்ளனர்.
மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
நமது நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாவட்ட காசநோய் மையம் 1996 ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இன்று உலக காசநோய் தினம் கொண்டாடப்படுவதை தொடர்ந்து இன்றிலிருந்து 2025 ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டில் காசநோயை முற்றிலுமாக ஒழிக்க தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது. இந்தியாவில் வருடத்திற்கு ஒரு இலட்சம் மக்கள் தொகையில் 203 நபர்கள் இந்நோயின் காரணமாக பாதிக்கபடுகின்றனர்.காசநோய் என்பது பரம்பரை நோய் அல்ல வயது வரம்பின்றி ஆண்,பெண், குழந்தைகள் என அனைவரையும் தாக்கும் தன்மையுடையது. காசநோய் அறிகுறியாக ஆரம்ப கட்டத்தில் இருமல், சளி, மாலை நேர காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் பொதுமக்கள் தங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலோ, அரசு மருத்துவமனைகளிலோ இலவசமாக சளி பரிசோதனை செய்து கொள்ளலாம். இதன் மூலம் முன்கூட்டியே காசநோய் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு விரைவில் குணமடைய வாய்ப்புள்ளது.

மேலும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் சென்ற ஆண்டு மட்டும் 749 நோயாளிகள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரசு இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்குவதுடன் ஒவ்வொரு மாதமும் தலா ரூ.500 வீதம் சிகிச்சை முடியும்வரை காசநோயாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது. காசநோய் இல்லா நாகப்பட்டினம் மாவட்டத்தை உருவாக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
காசநோய் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அனைவரும் எடுத்துக்கொண்டனர். மேலும், கல்லூரி மாணவர்களுக்கிடையே காசநோய் விழிப்புணர்வு பற்றிய கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி, கோலப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தில் மருத்துவர்கள் சிறப்பாக பங்களித்தமைக்காகவும் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயத்தினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.விஸ்வநாதன் ,இணை இயக்குநர் சுகாதார பணிகள் ஜோஸ்பின் அமுதா துணை இயக்குநர் காசநோய் மரு.எஸ்.சங்கீதா, துணை இயக்குநர் தொழுநோய் மரு.சங்கரி, மருத்துவர்கள், காசநோய் பணியாளர்கள், செவிலியர்கள் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

