நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் தமிழ்நாடு அரசின் குடும்ப நல துறை சார்பில் நாகப்பட்டினம்,
திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பணிபுரியும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்களுக்கான தர நிர்ணயக்குழு ஒருநாள் பயிலரங்கத்தினை
மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
நாகப்பட்டினம் மார்ச் 17
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள தனியார் திருமணமண்டபத்தில் தமிழ்நாடு அரசின் குடும்ப நல துறை சார்பில் நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பணிபுரியும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்களுக்கான தர நிர்ணயக்குழு ஒருநாள் பயிலரங்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
தர நிர்ணயக்குழு பயிலரங்கத்தினை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது
தமிழ்நாடு அரசின் குடும்ப நல துறை சார்பில் நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பணிபுரியும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்களுக்கான தர நிர்ணயக்குழு ஒருநாள் பயிலரங்கம் இன்று நடைபெற்று வருகிறது. மற்ற மாவட்டங்கள் போலவே நமது மாவட்டமும் மருத்துவத்தில் சிறந்த இடத்தை எட்டியுள்ளது. ஒரு அரசு பணியாளராக நாம் சமூகத்தின் மீதுள்ள அக்கரை, பொறுப்பினை உணர்ந்து பணியாற்ற வேண்டும். தங்கள் பணியை ஈடுபாட்டோடு பணிபுரிந்து, பொதுமக்களின் நலனுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய முன் வர வேண்டும். தாய்மார்கள் இறப்பு விகிதத்தை குறைத்து, குடும்ப நல சேவைகளை தரம் உயர்த்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி தங்களது பணியில் சிறந்து விளங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.விஸ்வநாதன், துணை இயக்குநர் (குடும்பநலம்) ஜோஸ்பின்அமுதா, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மருத்துவக்கல்லூரி முதல்வர்கள், இணை இயக்குநர் மற்றும் துணை இயக்குநர், தனியார்துறை மருத்துவர்கள், மற்றும் மருத்துவ அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

