நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் பொதுப்பணித்துறை சார்பில் வட்டாட்சியர் அலுவலக கட்டடம் மற்றும் மாவட்ட நகர்புற மற்றும் ஊரமைப்பு அலுவலக கட்டடம் ஆகிய கட்டடங்கள் கட்டும் பணிக்கான பூமி பூஜையினை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று தொடங்கி வைத்தார்.
நாகப்பட்டினம் மார்ச் 17
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் பொதுப்பணித்துறை சார்பில் வட்டாட்சியர் அலுவலக கட்டடம் மற்றும் மாவட்ட நகர்புற மற்றும் ஊரமைப்பு அலுவலக கட்டடம் ஆகிய கட்டடங்கள் கட்டும் பணிக்கான பூமி பூஜையினை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் என்.கௌதமன் தமிழ்நாடு தாட்கோ கழக தலைவர் உ.மதிவாணன் நாகப்பட்டினம் சட்ட மன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷா நவாஸ் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி ஆகியோர் உடன் கலந்துகொண்டனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது..
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க நம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் பொதுப்பணித்துறை கட்டட கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம் சார்பில் வட்டாட்சியர் அலுவலக கட்டடம் கட்டும் பணி தமிழ்நாடு அரசின் ஆணையின்படி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மூலம் ரூ.400.97 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ளது. இக்கட்டடம் தரைதளம் மற்றும் முதல்தளத்தில் தலா 590.00 ச.மீ என மொத்தம் 1180.00 ச.மீ பரப்பளவில் அமைக்கப்படுகிறது. மேலும் மாவட்ட நகர்புற மற்றும் ஊரமைப்பு அலுவலக கட்டடம் கட்டும் பணி தமிழ்நாடு அரசின் ஆணையின்படி வீட்டுவசதி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மூலம் ரூ.236.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ளது. இக்கட்டடம் தரைதளம் 225.00 ச.மீ. மற்றும் முதல்தளம் 225.00 ச.மீ என மொத்தம் 2421.00 ச.அடி பரப்பளவில் அமைக்கப்படுகிறது.இக்கட்டடங்கள் கட்டும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் வி.ஷகிலா மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் ம.பிரதிவிராஜ் நகர மன்ற தலைவர் இரா.மாரிமுத்து நகர மன்ற துணைத் தலைவர் செந்தில்குமார், நாகப்பட்டினம் வட்டாட்சியர் என்.இராஜசேகரன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் மு.பிரபாகர், உதவி செயற்பொறியாளர் ஆர்.வேலுசாமி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

