தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பவுன்டேஷன் சார்பில் வருகிற 7ம் தேதி இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது.

தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பவுன்டேஷன் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் வருகிற 7ம் தேதி, தாளமுத்துநகர் மெயின் ரோடு, திருக்குறிப்பு தொண்டர் நாயனார் ஆரம்ப பள்ளியில் வைத்து நடைபெற உள்ளது. இதில் பயன்பெற ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஜெராக்ஸ், செல்போன் ஆகிய ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு 95247 30888 என்ற செல்போன் என்ணில் தொடர்பு கொள்ளலாம்.


