நாகப்பட்டினம் மாவட்டம்
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் வைக்கவேண்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ், அதிரடி ஆணை .
நாகப்பட்டினம் மார்ச் 6
தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பெற்ற 27.12.1956ஆம் நாளை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஆட்சிமொழிச் சட்டவாரமாகக் கொண்டாடப்பெறுதல் வேண்டும் என்று அரசால் ஆணையிடப்பட்டது.அதனடிப்படையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆட்சிமொழிச் சட்டவார விழா 01.03.2023ஆம் நாளான அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதன் தொடர்ச்சியாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் அமைப்பது தொடர்பான கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஏப்ரல் 14ஆம் தேதிக்குள் அனைத்து வணிக நிறுவனங்களின் பெயரப்பலகைகளும் தமிழில் மாற்றம் செய்யப்படவேண்டும் என மாவட்ட ஆட்சித்லைவர் ஆணையிட்டுள்ளார். மாற்றம் செய்யப்படாத வணிக நிறுவனங்கள் மீது மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.இக்கூட்டத்தில்; தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ப.வசந்தகுமார், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் முனைவர் இரா.அன்பரசி தமிழ் வளர்ச்சித் துறை உதவியாளர் ஆ.லியாகத்அலி மற்றும் நாகப்பட்டினம் நகரத்தில் உள்ள வணிக நிறுவன உரிமையாளர்கள் வணிகர் சங்க நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

