தூத்துக்குடி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 நாள் சுற்றுப்பயணமாக தென் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். கடந்த 05.03.2023, 06.03.2023 ஆகிய இரு தேதிகளில் மதுரை, சிவகங்கை மாவட்டங்களில்“களஆய்வில் முதலமைச்சர்” நிகழ்ச்சியிலும் மற்றும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு நிறைவாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தருகிறார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு 07.03.2023 செவ்வாய்கிழமை அன்று மதியம் கார் மூலம் தூத்துக்குடி விமானநிலையம் வருகை தருகிறார். வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மதியம் 12.00மணிக்கு விமானநிலையம் அருகே உற்சாக வரவேற்பு அளிக்கப்பட இருக்கிறது.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்ட நிர்வாகிகள், சட்டமன்ற முன்னாள், இந்நாள் உறுப்பினர்கள், மாநில அணி நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், ஊராட்சி, வார்டு செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், இளைஞரணி, மாணவரணி, மகளிரணி உள்ளிட்ட கழகத்தின் அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், தொண்டர்கள் அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்று கலந்து கொள்ள வருகை தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் அவைத்தலைவர் செல்வராஜ் தலைமையில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய மார்க்கன்டேயன் எம்.எல்.ஏ, வடக்கு மாவட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழக முதலமைச்சரின் உண்மை உழைப்பு அரசின் சாதனைகள் அதன் மூலம் வெற்றியாக அமைந்தது இதுபோல் அனைத்து தேர்தல்களிலும் அனைவரையும் அரவணித்து வெற்றி பெற வேண்டும். நாளை தூத்துக்குடி வருகை தரும் முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது அனைவரும் திரண்டு வரவேண்டும். என்று கேட்டுக்கொண்டார்.
கூட்டத்தில் மார்க்கன்டேயன் எம்.எல்.ஏ, மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாநில நெசவாளர் அணி துணைச்செயலாளர் வசந்தன் ஜெயக்குமார், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஆறுமுகம், ராஜ்மோகன் செல்வின், ஏஞ்சலா, பொருளாளர் ரவீந்திரன், மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, பொருளாளர் அனந்தையா, தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மகாலட்சுமி சந்திரசேகர், கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, ஒன்றிய செயலாளர்கள் காசிவிஸ்வநாதன், முருகேசன், மூம்முர்த்தி, ராதாகிருஷ்ணன், செல்வராஜ், நவநீதகண்ணன், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணிஸ்டாலின், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், நிர்மல்ராஜ், ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், சுரேஷ்குமார், மேகநாதன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

