நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் திருப்பூண்டி கிழக்கு ஊராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நாகப்பட்டினம் ஜனவரி 4
நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் திருப்பூண்டி கிழக்கு ஊராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்துவதில் ஆசிரியரின் பங்கு முக்கியமானது, ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது மாணவர்கள் அலட்சியமாக நடந்து கொள்ளாமல், கூர்ந்து கவனித்து பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்டு புரிந்து படிக்க வேண்டும். எனவே பள்ளியில் பயிலும் மாணவ,மாணவிகள் நல்ல ஒழுக்கம், நல்ல பழக்கம், கண்ணியம் மற்றும் தன்னம்பிக்கை போன்றவற்றை கற்றுக்கொள்ள வேண்டும். முக்கியமாக போதைப்பொருள்கள், மதுபழக்கங்களுக்கு எதிராக மாணவர்கள் இருக்க வேண்டும். மாணவர்கள் கைப்பேசிகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். இருசக்கர வாகனங்களை ஓட்டுவது போன்ற அனைத்தையும் தவிர்த்து படிப்பில் மட்டும் முழு கவனம் செலுத்த வேண்டும்.

ஆசிரியர்கள் மாணவர்களிடம் பாடங்களை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் நடத்துவதன் மூலம் மாணவர்களின் தேர்ச்சி விகிதம், பள்ளியின் தேர்ச்சி விகிதம் அதிகமாகும், நம் மாவட்டத்தின் 100 சதவீதம் தேர்ச்சி என்ற இலக்கை நிர்ணயம் செய்து கொண்டு ஆசிரியர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார். தொடர்ந்து கீழையூர் ஊராட்சி ஒன்றியம் திருப்பூண்டி கிழக்கு ஊராட்சி உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வம்சம் திட்டம் செயல்படுவது குறித்தும், பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் மருந்து மாத்திரை இருப்பு குறித்தும், திருப்பூண்டி கிழக்கு ஊராட்சி மலக்காய்ப்பள்ளித் தெருவில் உள்ள நியாய விலை கடை மூலம் பொது மக்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசு பொருட்களுக்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணி நடைபெறுவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள்
கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

