• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள மீன்பிடி துறைமுகத்தில் 30 மெட்ரிக் டன் உற்பத்தி திறன் கொண்ட பனிக்கட்டி உற்பத்தி நிலையம் மற்றும் முன் மீன் பதனப்படுத்தும் மையத்தினை காணொலி காட்சி வாயிலாக இன்று திறக்கப்பட்டதை தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டார்.

policeseithitv by policeseithitv
October 20, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள மீன்பிடி துறைமுகத்தில் 30 மெட்ரிக் டன் உற்பத்தி திறன் கொண்ட பனிக்கட்டி உற்பத்தி நிலையம் மற்றும் முன் மீன் பதனப்படுத்தும் மையத்தினை காணொலி காட்சி வாயிலாக இன்று திறக்கப்பட்டதை தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள மீன்பிடி துறைமுகத்தில் 30 மெட்ரிக் டன் உற்பத்தி திறன் கொண்ட பனிக்கட்டி உற்பத்தி நிலையம் மற்றும் முன் மீன் பதனப்படுத்தும் மையத்தினை காணொலி காட்சி வாயிலாக இன்று திறக்கப்பட்டதை தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டார்.

நாகப்பட்டினம் அக்டோபர் 20 மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள மீன்பிடி துறைமுகத்தில் 30 மெட்ரிக் டன் உற்பத்தி திறன் கொண்ட பனிக்கட்டி உற்பத்தி நிலையம் மற்றும் முன் மீன் பதனப்படுத்தும் மையத்தினை காணொலி காட்சி வாயிலாக இன்று திறக்கப்பட்டதை தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள துறைமுகத்தில் வருடத்திற்கு 15,000 மெட்ரிக் அளவிற்கு மீன் பிடி தொழில் நடைபெற்று வருகிறது. இத்துறைமுகத்தில் பிடிக்கப்படும் மீன்களை பாதுகாப்பதற்கும், கடலில் படகில் கொண்டு வரும் கொண்டு செல்வதற்கும் தேவைப்படும் பனிக்கட்டிகளை தனியாரிடம் அதிக விலை கொடுத்து வாங்கி செல்கின்றனர். மீனவர்கள் இத்துறைமுகத்தில் ஒரு பனிக்கட்டி உற்பத்தி நிலைய அமைத்தால் அது மீனவர்களுக்கு குறைந்த விலையில் துறைமுகத்திற்கு அருகிலேயே கிடைக்கும் என்று அரசிடம் கோரிக்கை வைத்தனர்.

அந்த கோரிக்கையினை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் ஒப்புதல் பெறப்பட்டதை தொடர்ந்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சார்பில் ஒருங்கிணைந்த கூட்டுறவு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தேசிய கூட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தின் நிதியிலிருந்து ரூ.1.85 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு மாநில தலைமை மீன்வள கூட்டுறவு, ஆணையம் மூலம் 20.7.2020 அன்று பணிகள் தொடங்கப்பட்டு,

30 மெட்ரிக் டன் பனிக்கட்டி உற்பத்தி நிலையம் மற்றும் 3500 லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட தண்ணீர் தொட்டி, மின் தேக்கி குளிரட்டும் தொட்டி பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. திட்டத்தின் பயன்கள் மீனவர்கள் தங்கள் படகுகளுக்கு தேவையான குறைந்த விலையில் பெற்று மீன்பிடி தொழில் செய்ய வசதியாகயி ருக்கும் படிக்கட்டுகளை தரமாகவும் உடனடியாகவும் துறைமுகத்திற்கு அருகிலேயே பெற்று செல்லலாம் மீனவர்கள் வாழ்வாதாரம் முன்னேற்றம் அடையும்.

மேலும், கால்நடை பராமரிப்பு பால்வள மற்றும் மீன்வளத் துறை மூலம் 114 இலட்சம் மதிப்பீட்டில் மீன்களை சுகாதார முறையில் கையாள்வதற்கு முன் பதனப்படுத்தும் மையம் மற்றும் மீன் ஏலம் விடும் வசதிகளை அமைக்கும் பணிக்கும் உத்திரவு வழங்கப்பட்டதை தொடர்ந்து அதன்படி பணி தொடங்கப்பட்டு பனிக்கட்டி இறக்கும் அறை, பொருட்கள் சுத்தப்படுத்தும் அறை, மீன் இறக்கும் அறை, இருபாலர் உபயோகிக்கும் அறை, கழிவறை, மீன் பதனக்கூடம், பதன மீன் கையாளும் அறை, முன் மீன் பதனப்படுத்தும் வசதி என அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் பயன்கள் இங்கு உள்ள மீனவர்களுக்கு மீன்களை சுகாதார முறையில் கையாண்டு ஏலம் விடுவதற்கு பெரும் உதவியாக இருக்கும் மேலும் அவர்களது பொருளாதார மற்றும் வாழ்வாதாரம் மேம்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.இந்நிகழ்ச்சியில் மீன்வளத்துறை இணை இயக்குநர் தா.இளம்வழுதி, மீன்வளத்துறை உதவி இயக்குநர் கோ.ஜெயராஜ், செயற்பொறியாளர் (மீன்பிடித்துறைமுகம்) எஸ்.கிருஷ்ணமூர்த்தி, அக்கரைப்பேட்டை ஊராட்சிமன்றத் தலைவர் அழியாநிதி மனோகரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்

எல்விஸ் லாய் மச்சோடா.

Previous Post

தூத்துக்குடி சிவன் கோவில் தேரோட்டம் வடம் பிடித்து அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தனர்.

Next Post

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொடியாளத்தூர் ஊராட்சியில் புதிய நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டிடத்தினையும், காக்கழனி ஊராட்சியில் புதிய ஊராட்சிமன்ற அலுவலக கட்டிடத்தையும் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன், கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி ஆகியோர் திறந்து வைத்தனர்.

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In