தூத்துக்குடியில்
முரட்டு பக்தர் பெரியசாமி திறந்துவைத்த:
“கலைஞர் வாட்டர் டேங்கில்”
மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில்
ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை
கொண்டாட்டம்!!!
தூத்துக்குடி,அக்,4
நாடு முழுவதும் இன்று ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டு வருகிறது.
கல்விக்குரிய சரஸ்வதி, செல்வத்துக்குரிய லட்சுமி, வீரத்துக்குரிய பார்வதி போன்றோரை வணங்கக்கூடிய பண்டிகைதான் நவராத்திரி. இந்த பண்டிகையின் ஒன்பதாவது நாளில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. இதன்படி, தங்களது தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் பொருட்களை வைத்து இன்று பூஜை செய்யப்படுவது வழக்கம்.
பொதுமக்கள் தங்களது வீடுகளில் வழிபாடு நடத்தி வருகின்றனர். இதேபோல, தொழில் நிறுவனங்களிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. தங்கள் தொழிலுக்கும், படிப்புக்கும் உதவியாக இருக்கும் கருவிகளை அலங்கரித்து வழிபாடு நடத்துவர். அவல், பொரி, சுண்டல், பழம் உள்ளிட்டவைகளை சாமிக்கு படைத்து ஆயுத
பூஜை கொண்டாடப்படு கிறது. இதன்படி
தூத்துக்குடி மாநகராட்சியில் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் பெயர் தாங்கி நிற்கும் “கலைஞர் வாட்டர் டேங்கில்” நடைபெற்ற சரஸ்வதி பூஜையில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்றார்.
கலைஞரின் முரட்டு பக்தர் மறைந்த
என்.பெரியசாமி அவர்கள் சட்டமன்ற உறுப்பினராகவும், நகர்மன்றத் தலைவராகவும் இருந்த போது 30.05.1989 அன்று அன்றைய தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் பெயரில் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே “கலைஞர் வாட்டர் டேங்கை” என்.பெரியசாமி
திறந்து வைத்தார்.
ஆண்டுதோறும் இந்த வாட்டர் டேங்கில் மாநகராட்சி பணியாளர்கள் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம் அதன்படி மறைந்த முரட்டு பக்தர் பெரியசாமி அவர்களின் மகன் ஜெகன் பெரியசாமி
மாநகரத்தின் மேயராக இன்று அங்கு நடைபெற்ற சரஸ்வதி பூஜை விழாவில் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மேயர் தெரிவித்ததாவது
அனைத்து மக்களுக்கும் ஆரோக்கியம் செல்வம் அனைத்து விதமான காரியங்களிலும் வெற்றி கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை இந்த தருணத்தில் வேண்டினேன். என்று தெரிவித்தார். இங்கு நடைபெற்ற சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை நிகழ்ச்சி ஏற்பாட்டை கலைஞர் வாட்டர் டேங்க் பணியாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள் பலர் சிறப்பாக செய்திருந்தனர்.
மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை இங்கு வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர் பிரின்ஸ், முன்னாள் மாமன்ற உறுப்பினர் ரவீந்திரன், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், மாநகராட்சி பணியாளர்கள் தங்கராஜ், மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் ஊழியர்கள், டைமண்ட் உறுப்பினர்கள் பொதுமக்கள் பலர் இந்த சரஸ்வதி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
செய்தி தொகுப்பு
எம்.ஆத்தி முத்து

