*தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில், பக்தர்களின் வாழ்வில் பணம் கொழித்து செல்வவளம் பெருகிட வேண்டியும், பருவமழை நன்கு பெய்து பசுமைவளம் சிறக்க வேண்டியும் புரட்டாசி மஹாளய அமாவாசையை முன்னிட்டு மஹா யாகம் மற்றும் 64 வகையான அபிஷேகத்துடன் சிறப்பு வழிபாடுகள் கோலாகலமாக நடைபெற்றது.*
தூத்துக்குடி கோரம்பள்ளம் அருகிலுள்ள அய்யனடைப்பு ஸ்ரீசித்தர்நகர் ஸ்ரீசித்தர் பீடத்தில் 11அடி உயரத்தில் ஒரே கல்லால் உருவான மிகப்பிரமாண்டமான ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-மஹாகாலபைரவர் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் விநாயகர், ஆஞ்சநேயர், குருமகாலிங்கேஸ்வரர், தெட்சிணாமூர்த்தி, மஹாலட்சுமி, மஹாசரஸ்வதி, முனியசாமி, வீரணார் உள்ளிட்ட சுவாமிகளும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
ஸ்ரீசித்தர் பீடத்தில் ஆண்டுதோறும் ஸர்வ மஹாளய அமாவாசை நாட்களான தை, ஆடி, புரட்டாசி மாத அமாவாசை நாட்களில் ”உலக மக்கள் நலமாக வாழவேண்டியும், பருவமழை தவறாமல் பெய்து பசுமைவளம் செழிக்கவேண்டியும், பக்தர்களின் வாழ்வில் செல்வவளம் கொழிக்கவேண்டியும் மிளகாய் வத்தல், பாகற்காய், மிளகாய், எலுமிச்சைப்பழம் கொண்டு “சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் சிறப்பு மஹா யாக வழிபாடுகள் தவறாமல் நடத்தப்பட்டு வருகிறது.
இதன்படி, இன்று 25ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) புரட்டாசி மாத ஸர்வ மஹாளய அமாவாசையை முன்னிட்டு சிறப்பு மஹா யாகம் நடைபெற்றது. பக்தர்களின் வாழ்வில் மனக்குறைகள், கடன்தொல்லைகள், எதிரித்தொல்லைகள் யாவும் நீங்கிடவும், பணம் கொழித்து செல்வவளம் பெருகிடவும், நோயில்லாத நல்வாழ்வு அமைந்திடவும், கல்விவளம் சிறந்திடவும், திருமணவரன், குழந்தைபாக்யம் கிடைத்திடவும், தகுதிக்கேற்ப அரசு வேலை கிடைத்திடவும், பருவ மழை நன்கு பெய்திட வேண்டி “சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் சிறப்பு மஹாயாக வழிபாடுகள் நடைபெற்றது.
காலை 10மணிக்கு சிறப்பு மஹா யாகத்திற்கான வழிபாடுகள் சித்தர் பீடத்தின் சுவாமிகள் “சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் கணபதி, நவக்கிரக ஹோமம், பிரத்தியங்கிரா, காலபைரவர் ஹோமத்துடன் கோலாகலமாக துவங்கியது. தொடர்ந்து காலை 10.30மணிக்கு சிறப்பு மஹா யாகம் துவங்கி நடைபெற்றது.
மதியம் 12.30மணிக்கு ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவிக்கும், காலபைரவருக்கும் பால், தயிர், பன்னீர், புஷ்பம், சந்தனம், திருநீறு, மஞ்சள், குங்குமம், இளநீர் உள்ளிட்ட 64வகையான அபிஷேகமும், மதியம் 1.30மணிக்கு மஹா தீபாராதனையும் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மஹா யாக வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
மஹா யாகத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு கடன்தொல்லைகள் யாவும் நீங்கி, இல்லத்தில் செல்வங்கள் பெருகும் ”மஹா யந்திரம்” வழங்கப்பட்டது.
சிறப்பு வழிபாடுகளுக்கான ஏற்பாடுகளை “சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் வழிபாட்டுக் குழுவினர், மகளிர் அணியினர் மற்றும் பக்தர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
===============

