• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

ஆத்தங்கரைவிடுதி அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்க பள்ளி இணைந்து நடத்திய ஜம்பெரும் விழா..

policeseithitv by policeseithitv
September 17, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
ஆத்தங்கரைவிடுதி அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்க பள்ளி இணைந்து நடத்திய ஜம்பெரும் விழா..
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் தொடக்க பள்ளி இணைந்து ஆத்தங்கரை விடுதியில் துளிர் இல்லம் தொடக்க விழா அண்ணா பிறந்த நாள் விழா, மந்திரமா? தந்திரமா? உலக பொறியாளர் தினம், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு என ஜம்பெரும் விழா நடைபெற்றது.

இவ் விழாவிற்கு தலைமை ஆசிரியர் சிவக்குமார் தலைமை வகித்தார். அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பழனிச்சாமி வரவேற்றார். ஆத்தங்கரைவிடுதி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மா.கோவிந்தசாமி, கந்தர்வகோட்டை ஒன்றிய அறிவியல் இயக்க வட்டார தலைவர் அ.ரகமதுல்லா வட்டாரச் செயலாளர் மா.சின்ன ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட புதுக்கோட்டை மாவட்ட தலைவர் எம்.வீரமுத்து பேசியதாவது அறிவியல் இயக்கம் மாணவர்களுக்கு தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாடு விரைவில் நடக்க இருப்பதாகவும், புதுகை புத்தக திருவிழாவை சிறப்பாக நடத்தினோம்.அறிவியல் மனப்பான்மை வளர்ப்பதற்கு மாணவர்கள் தொடர்ந்து வாசிக்க வேண்டும் என்று பேசினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட இணைச் செயலாளர் எம். சிவானந்தம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு மந்திரமா? தந்திரமா? என்ற அறிவியல் விழிப்புணர்வு நிகழ்வை செய்து காட்டினார்.

இந்த நிகழ்வின் மூலம் உலகில் போலி அறிவியல் பரப்பப்படுவது தடுக்கப்படும் எனவும் உண்மையான அறிவியல் என்பது ஏன்? எதற்கு ?எப்படி? என்று வினாக்கள் மூலம் விடை பெற்று அறிவுபூர்வமாக சிந்திக்க கூடியது எனவும் பேசினார். அறிவியல் இயக்க பாடல்களைப் பாடி மாணவ மாணவிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். கந்தரவகோட்டை வட்டாரத் தலைவர் அ.ரகமதுல்லா பேசும் பொழுது தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பல்வேறு வகையான அறிவியல் நிகழ்வுகளை மாணவர்களுக்கு வழங்கி வருகிறது. அதனுடைய ஒரு நிகழ்வு தான் இந்த மந்திரமா? தந்திரமா ?நிகழ்வு அறிவியல் வினாடி வினா, துளிர் திறன்றிவுத் தேர்வு, துளிர் இல்லம் என அறிவியல் திறனை வளர்க்கக்கூடிய வகையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தொடர்ந்து பங்காற்றி வருகிறது என்றும், துளிர் திறனறிவு தேர்வில் நமது பள்ளியைச் சேர்ந்த அனைத்து மாணவர்களும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார். அறிவியல் இயக்க மாத இதழ்கள் துளிர், ஆங்கில இரு மாத இதழ் ஜந்தர், மந்தர்,சிறகு விழுது உள்ளிட்ட அறிவியல் நூல்களை மாதந்தோறும் வாசிக்க வேண்டும் எனவும் கூறினார். வட்டார செயலாளர் சின்ன ராஜா பேசும்போது பேரறிஞர் அண்ணா அவர்களின் 114 வது பிறந்த தினத்தை முன்னிட்டு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் காலை உணவு திட்டத்தை அமல்படுத்தி உள்ளது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

தலைமை ஆசிரியர் சிவக்குமார் பேசும்போது அறிவியல் கண்டுபிடிப்புகளை சிறந்த முறையில் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற்றம் அடைய முடியும் என்று பேசினார். இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் பாஸ்கர், ராஜம்மாள், மலர்கொடி, இடைநிலை ஆசிரியர்கள் செல்வி,மேரிநிர்மலா, சிவஞானம், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர் அருட்செல்வி ஆகியோர் செய்து இருந்தனர். நிறைவாக நன்றியுரை கணித பட்டதாரி ஆசிரியர் மா. கண்ணன் கூறினார்.

Previous Post

கந்தர்வகோட்டை வட்டார வள மையத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு …

Next Post

தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் மெகா தூய்மை பணி..!* *ஒரே நாளில் 28 டன் குப்பைகள் அதிரடியாக அகற்றம்..!!* *பாலிதீன்-பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாக தவிர்க்க மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி அறிவுறுத்தல்..!!!*

Next Post
தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் மெகா தூய்மை பணி..!*  *ஒரே நாளில் 28 டன் குப்பைகள் அதிரடியாக அகற்றம்..!!*  *பாலிதீன்-பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாக தவிர்க்க மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி அறிவுறுத்தல்..!!!*

தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் மெகா தூய்மை பணி..!* *ஒரே நாளில் 28 டன் குப்பைகள் அதிரடியாக அகற்றம்..!!* *பாலிதீன்-பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாக தவிர்க்க மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி அறிவுறுத்தல்..!!!*

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In