விளாத்திகுளம் உட்கோட்டத்தில் எட்டயபுரம் காவல் நிலைய எல்லை பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் மேய்ந்து கொண்டிருந்த 9 செம்மறி ஆடுகளை (மதிப்பு சுமார் 45 ஆயிரம் ரூபாய் ) யாரோ திருடி சென்று விட்டதாக எட்டயபுரம் காவல் நிலையத்திற்கு எட்டயபுரத்தை சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்களின் உத்தரவுப்படியும் விளாத்திகுளம் துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்களின் ஆலோசனைபடியும் எட்டையாபுரம் உதவி ஆய்வாளர் திரு.பொன்ராஜ் அவர்கள் நிலைய குற்ற எண்:73/2021 U/S :379IPC வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
துரிதமாக நடவடிக்கை எடுக்கும் பொருட்டு சிந்தலக்கரை சமத்துவபுரம் அருகே வாகனத் தணிக்கை செய்யும் போது TN 63 BC 2771 -BOLERO PICK UP என்ற வாகனத்தில் 9செம்மறி ஆடுகளைக் கொண்டு சந்தேகத்திற்கு இடமாக வந்த மதுரையைச் சேர்ந்த 7 பேரை பிடித்து எட்டையாபுரம் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை செய்ததில் எட்டயபுரம் தேசிய நெடுஞ்சாலைகளில் மேய்ந்து கொண்டிருந்த 9 செம்மறி ஆடுகளை திருடியதாக ஒப்புக்கொண்டனர்.

எட்டையாபுரம் உதவி ஆய்வாளர் அவர்கள் மதுரையைச் சேர்ந்த
1.பாலகிருஷ்ணன் வயது37
2. அக்னி ராஜ் வயது 41
3. சோலை வயது 40
4. திருப்பதி வயது 35
5 லட்சுமணன் வயது 33
6. அருஞ்சுனை வயது 50
7. சுப்பிரமணியன் வயது 70
ஆகியோர்களை கைது செய்து 9 செம்மறி ஆடுகளையும் அதனை திருடியதற்கு பயன்படுத்திய TN 63 BC 2771 -BOLERO PICK UP என்ற நான்கு சக்கர வாகனத்தையும் கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்ற நடுவர் அவர்களிடம் ஆஜர் செய்து எதிரிகள் ஏழு பேரையும் சிறையில் அடைத்தார்கள்.
சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்களும், விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்களும் வெகுவாக பாராட்டினார்கள்.

