தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரிக்கு தூத்துக்குடி ரயில் நிலையத்தில் தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் சார்பில் மிக பிரம்மாண்ட வரவேற்பு!!
தூத்துக்குடி ஆகஸ்ட் 26

ராகுல் காந்தி நடைபயணம் குறித்து மண்டல அளவிலான கலந்தாய்வு கூட்டத்திற்கு தூத்துக்குடி வருகை தந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி அவர்களுக்கு தூத்துக்குடி ரயில் நிலையத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்டம், மாநகர் மாவட்டம் காங்கிரஸ் சார்பில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு ராகுல்காந்தி அடுத்த மாதம் 7-ந்தேதி நடைபயணத்தை தொடங்குகிறார். ராகுல்காந்தி நடைபயணம் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் ராகுல்காந்தி 150 நாட்கள் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார்.
இந்த நடைபயணமானது கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை சுமார் 3,500 கிலோ மீட்டர் தூரம் செல்ல திட்டமிடப்பட்டு உள்ளது. கன்னியாகுமரியில் இருந்து ராகுல்காந்தி நடைபயணம் அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந் தேதி தொடங்க உள்ளது. அங்கிருந்து புறப்படும் ராகுல்காந்தி நாகர்கோவில், தக்கலை, களியக்காவிளை வழியாக கேரளாவிற்கு செல்கிறார். பின்னர் அங்கிருந்து நாடு முழுவதும் இந்த நடைபயணத்தை ராகுல்காந்தி மேற்கொள்கிறார். முன்னேற்பாடு பணிகள் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு ராகுல்காந்தி நடைபயணம் மேற்கொள்வதையடுத்து அதற்கான முன்னேற்பாடு பணிகளை காங்கிரசார் மேற்கொண்டு வருகிறார்கள். இதையொட்டி இன்று (26.8.2022) வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ஹோட்டல் பானு பிருந்தாவன்
பாளை ரோடு வைத்து கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் தூத்துக்குடி
மாவட்டங்கள் கன்னியாகுமரி கிழக்கு கன்னியாகுமரி மேற்கு நாகர்கோவில் மாநகர் தூத்துக்குடி தெற்கு தூத்துக்குடி மாநகர் தூத்துக்குடி வடக்கு ஆகிய மாவட்டங்களை
உள்ளடக்கி மண்டல அளவிலான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தூத்துக்குடி வருகை தந்த காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியை வரவேற்கும் விதமாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும் ஸ்ரீ வைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் ஏற்பாட்டில் நகர் முழுவதும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கொடிகள் நட்டப்பட்டிருந்தது.

அதுபோல் தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், மாநகர் காங்கிரஸ் கமிட்டி, நிர்வாகிகள் தொண்டர்கள் பெருந்திரளானோர் கலந்து கொண்டு தூத்துக்குடி ரயில் நிலையத்தில் காங்கிரஸ் தலைவர் அழகிரிக்கு மிக பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். தூத்துக்குடியில் நடைபெறும் ராகுல் காந்தி நடைபயணம் குறித்த மண்டல அளவிலான கலந்தாய்வு கூட்டத்திற்கு ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் தலைமையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. தூத்துக்குடி ரயில் நிலையத்தில் நடைபெற்ற இந்த உற்சாக வரவேற்பு கூட்டத்தில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் சங்கர், சந்திரபோஸ் , காங்கிரஸ் எடிசன், மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் முரளிதரன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் கோபால், செல்வராஜ், உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்துகொண்டு வரவேற்பளித்தனர்.
- செய்தி தொகுப்பு எம். ஆத்தி முத்து
|
ReplyForward
|

