தியாகத்தாய் சின்னம்மா பேரவையின் நிறுவனத்தலைவர் சுப.தர்மலிங்கம் அவர்களின் ஒப்புதலோடு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தியாகத்தாய் சின்னம்மா பேரவைக்கு புதியதாக நிர்வாகிகள் நியமனம் செய்ய முடிவு செய்து, தமிழகம் முழுவதும் மாநிலம், மண்டலம், மாவட்டம், நகரம், ஒன்றியம், கிளை ஆகிய பகுதிகளில் நிர்வாகிகள் நியமனம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அந்த அடிப்படையில் மூத்த பத்திரிகையாளரும் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சார்ந்த லயன் டாக்டர் கே.முத்து அவர்களை தியாகத்தாய் சின்னம்மா பேரவையின் தலைமை நிலைய செயலாளராகவும் மற்றும் காஞ்சி மாவட்ட செயலாளராகவும், தியாகத்தலைவி சின்னம்மா பேரவை நிறுவனத்தலைவர் சுப.தர்மலிங்கம் அவர்கள் ஒப்புதலோடு நியமிக்கப்பட்டார். மேலும், பேரவையில் உள்ள உடன்பிறப்புக்கள் அனைவரும் காஞ்சிபுரம் கே.முத்து அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு தந்து நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
மாநில தலைமை நிலைய செயலாளராக நியமிக்கப்பட்ட காஞ்சி லயன் டாக்டர் கே.முத்து அவர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. மேலும் தமிழகம் முழுவதும் இருந்து, தியாகத்தலைவி சின்னம்மா பேரவையின் நிர்வாகிகள் நேரிலும் தொலைபேசியிலும் வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.
இதுகுறித்து தலைமை நிலைய செயலாளர் காஞ்சி கே.முத்து தெரிவித்ததாவது: தியாகத்தாய் சின்னம்மா பேரவை சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஒன்றியம் கிளை வரை அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கிராம பகுதிகள் வரை இந்த அமைப்பை விரிவு படுத்தி வரும் அதன் நிறுவனத்தலைவர் சுப.தர்மலிங்கம் அவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் முழு ஒத்துழைப்போடு அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் ஏழை எளிய மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு கானும் வகையில் செயலாற்றுவேன் என தெரிவித்தார்.

தியாகத்தாய் சின்னம்மா பேரவையின் தலைமை நிலைய செயலாளராகவும் மற்றும் காஞ்சி மாவட்ட செயலாளராகவும் நியமிக்கப்பட்ட காஞ்சிபுரம் லயன் டாக்டர் கே.முத்து அவர்கள் பொறுப்பேற்றவுடன் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தியான மண்டபத்திற்கு வருகை தந்துள்ள ஆன்மீக சித்தர் அவர்களை நேரில் சந்தித்து அருளாசி பெற்றார். அவருடன் காவல் துணை கண்காணிப்பாளர்(ஓய்வு) பஞ்சட்ராம் அவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் உடன் சென்றனர்.
செய்தி தொகுப்பு: காஞ்சி சரவணா

