தூத்துக்குடி கின்ஸ் அகாடமி மாணவ மாணவிகளுக்கு மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ ஐஏஎஸ் பாராட்டு!!
தூத்துக்குடி ஆகஸ்ட் 14
தூத்துக்குடியில் கின்ஸ் அகாடமி என்ற பெயரில் அரசுத்துறை சார்ந்த பணிகளில் சேர்வதற்கு பல்வேறு வகையான இலவச கல்வியை பல்வேறு துறையை சார்ந்த அதிகாரிகள் வழிகாட்டுதலின்படி நடத்தப்பட்டு வருகிறது. போல்பேட்டை பகுதியில் இயங்கி வரும் கின்ஸ் அகாடமியின் நிறுவனத்தலைவர் பேச்சிமுத்து ஒரு சமூக ஆர்வலர், மனிதநேயப் பணிகளை நீண்ட காலமாக செய்து வருகிறார். ஏழை எளிய மக்களும் சிறந்த கல்வி பெறவேண்டும் என்ற நோக்கத்தோடு அனைவருக்கும் இலவச கல்வியை வழங்குவது மட்டுமின்றி அவர்களுக்கு தேவையான பல உதவிகளையும் எவ்வித எதிர்பார்ப்பு இன்றி செய்து வருகிறார் நிறுவனர் பேச்சிமுத்து.
கல்வியை அனைத்து தரப்பு மாணவ மாணவிகளும் பெற்று உயர்ந்த அரசு பொறுப்புக்கு செல்ல வேண்டும் என்ற குறிக்கோளோடு தொலைநோக்கு பார்வையோடு பல ஆண்டுகளாக கின்ஸ் அகாடமி மூலம் சிறப்பான சேவையை ஆற்றி வருகிறார் தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் பொதுமக்களிடம் நன்மதிப்பை பெற்ற கின்ஸ் அகாடமி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கின்ஸ் அகாடமி மாணவ மாணவிகள் தாங்களாகவே முன்வந்து
சுவர்களில் பல்வேறு வகையான சித்திரங்களை வரைந்தனர்.

பொதுமக்களுக்கு நல்லதொரு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் மேற்கண்ட சித்திரங்களை பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டினர். கின்ஸ் அகாடமி நிறுவனர் பேச்சிமுத்து அவர்களையும் மற்றும் இந்த நிறுவனத்தில் பயின்று வரும்
மாணவ, மாணவிகளை தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ ஐஏஎஸ் நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தது மட்டுமின்றி கின்ஸ் அகாடமி மென்மேலும் பல சாதனைகள் புரியவேண்டும் என்று வாழ்த்தினார்.
செய்தி தொகுப்பு
எம் ஆத்திமுத்து

