போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
நாகை ஆக 11
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிமாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் நடந்தது. இதில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் தாம்பரம் எம்.எல்.ஏ எஸ்.ஆர்.ராஜா, குழு உறுப்பினர்களான எம்.எல்.ஏக்கள் பூந்தமல்லி கிருஷ்ணசாமி, திருப்போரூர்
பாலாஜி, கீழ்வேளுர் நாகைமாலி, பெருந்துறை ஜெயகுமார், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், தமிழ்நாடு தாட்கோ கழக தலைவர் மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்தனர்.

பின்பு மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பின்படி இன்று முதல் ஒருவார காலம் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு வாரமாக அனுசரிக்கப்பட்டு
விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் தொடக்கமாக அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியினை எடுக்க ஆணையிடப்பட்டதைத் தொடர்ந்து நாகப்பட்டினம்
அடுத்த திருமருகல் அரசு மேல்நிலைப்பள்ளியில் “போதைப் பாதை அழிவுப்பாதை அதில் யாரும் செல்லாதீர்கள் யாரையும் செல்ல வீடாதீர்கள். போதையுடன் கைக்குலுக்காதீர்கள், உங்கள் வாழ்க்கையே கை நழுவி போய்விடும். போதைக்கு தெரிந்தது ஒன்றே ஒன்றுதான், அழித்தல் அழிவுக்கு துணை போகாதீர்கள். போதை உங்கள் சிந்தனையை அழிக்கும் உற்சாகத்தை கெடுக்கும், வளர்ச்சியை தடுக்கும்.
நீங்கள் பாராட்டி, சீராட்டி வளர்த்த உடம்பை நீங்களே ஏன் கெடுத்துக்கொள்கிறீர்கள்” என்ற போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ், சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர், தமிழ்நாடு தாட்கோ கழக தலைவர் உட்பட பள்ளி மாணவ மாணவிகள் எடுத்துக்கொண்டு போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினையும் தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் உட்பட வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளா்

