படகு கவிழ்ந்ததால் கடலில் தத்தளித்த இலங்கை மீனவர்களை மீட்ட தமிழக மீனவர்கள் .
வேதாரண்யம் ஆகஸ்ட் 2
இலங்கை யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்த அமலதாஸ் என்பவருக்கு சொந்தமான படகில் கடந்த 31ம் தேதி மதியம் பலாலி மீனவ கிராமத்தில் இருந்து மீன்பிடிக்க வந்த வி.ஜெனார்தனன் வ 28 த /பெ விஸ்வலிங்கம், பலாலி, யாழ்பாணம், இலங்கை . ஜெசிகரன் வ 21 த/பெ காந்தவடிவேல் பலாலி, யாழ்பாணம், இலங்கை ஆகிய இருவரும் பலாலி மீனவ கிராமத்தில் இருந்து மீன்பிடிக்க வந்தவர்கள்நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் இந்திய சர்வதேச எல்லை அருகே மீன்பிடித்து கொண்டு இருந்த போது படகு கவிழ்ந்ததில் இருவரும் பிளாஸ்டிக் கேனை பிடித்து கொண்டு கடலில் தத்தளித்தனர்.
இன்று காலை 7 மணிக்கு நாகை மாவட்டம் வேதாரணியம் அடுத்த சிறுதலைக்காடு பகுதியைச் சேர்ந்த கவியரசன் என்பவருக்கு சொந்தமான படக்கில் வந்வர்கள் தத்தளித்த இரண்டு மீனவர்களையும் படகில் ஏற்றிக்கொண்டு, மீன்பிடித்து விட்டு இன்று மதியம் சிறுதலைக்காடு மீனவ கிராமத்திற்கு கொண்டு வந்தனர். பின்பு இவர்கள் இருவரையும் வேதாரண்யம் கடற்கரை காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். இவர்கள் இருவரிடமும் வேதாரண்யம் கடற்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

