• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியம் அம்பல் ஊராட்சி சட்டநாதர் கோவில் வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்அ.அருண்தம்புராஜ் தலைமையில் மக்கள் நேர்காணல் முகாம்

policeseithitv by policeseithitv
July 20, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியம் அம்பல் ஊராட்சி சட்டநாதர் கோவில் வளாகத்தில்  மாவட்ட ஆட்சித்தலைவர்அ.அருண்தம்புராஜ் தலைமையில் மக்கள் நேர்காணல் முகாம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியம் அம்பல் ஊராட்சி சட்டநாதர் கோவில் வளாகத்தில் மக்கள் நேர்காணல் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் மற்றும் தமிழ்நாடு தாட்கோ தலைவர் உ.மதிவாணன் முன்னிலையில் இன்று 20.07.2022 நடைபெற்றது.

நாகப்பட்டினம் ஜூலை 20

இந்த மக்கள் தொடர்பு முகாமில் வருவாய்த்துறை, சமூகபாதுகாப்புத் திட்டம், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மாற்றுத்திறனாளி நலத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை வேளாண்மை பொறியியல்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் அரசின் திட்டங்கள் குறித்தும் அதனை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் விளக்கமளித்தனர்.

 

இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது

நம் மாவட்டத்தில் மாதம் ஒரு கிராமம் தேர்வு செய்து மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டு, மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று, அவர்களது குறைகளை நிவர்த்தி செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் துறை சார்ந்த பல திட்டங்கள் பற்றி தொடர்புடைய அலுவலர்களே மக்களுக்கு தெரியப்படுத்துகிறார்கள்.

 

தமிழக அரசானது பல்வேறு திட்டங்களை பொதுமக்கள் பயன்பெறும் வகையில்செயல்படுத்தி வருகிறது. அரசு அறிவிக்கும் திட்டங்கள், உதவிகளை பெற அறிந்து கொள்ளமுடியாத நிலையில் உள்ள மக்களை சந்திக்கும் ஒரு நிகழ்ச்சியே இந்த மக்கள் நேர்காணல் முகாமாகும். இதுபோன்ற அரசின் நலதிட்டங்கள் மற்றும் உதவிகளை அறிந்துகொண்டு பயன்பெறும் வகையில் இம்முகாம் அமையும்.

 

அவ்வாறு தமிழக அரசு அறிவிக்கும் எண்ணற்ற திட்டங்களை சரியான நபர்களுக்கு சரியான நேரத்தில் சென்றடைய வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். அப்படி சென்றடைந்தால் அத்திட்டம் வெற்றி பெற்றது என அர்த்தம். மேலும், உண்மையான கஷ்டத்தில் இருக்ககூடிய மக்களுக்கு உதவும் வகையில் மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செயல்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

 

இம்முகாமில் மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் இரண்டு பயனாளிகளுக்கு ரூ.6,000 மதிப்பீட்டில் காதுக்குப்பின் அணியும் காதொலிக் கருவியினையும், சமூகப்பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 73பயனாளிகளுக்கு மாதம் ரூ.1000 என 12 மாதத்திற்கு ரூ.8,76,000 மதிப்பீட்டில் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புதிட்ட முதியோர் உதவித்தொகை, கணவரால் கைவிடப்பட்டோர் உதவிதொகை, விதவை உதவிதொகை, மாற்றுத்திறனாளி உதவிதொகை, வருவாய் துறை சார்பில் 9 பயனாளிகளுக்கு ரூ.2,70,00 மதிப்பீட்டில் இலவச வீட்டுமனை பட்டாவினையும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.20,000 மதிப்பீட்டில் கலப்புத் திருமண நிதியுதவி சேமிப்பு பத்திரத்தினையும், வட்ட வழங்கல் அலுவலகத்தில் 11 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டையினையும், தோட்டக்கலைத்துறை மூலம் பயன்பெறும் 6 பயனாளிகளுக்கு ரூ.8,120 மதிப்பீட்டில் பிளாஸ்டிக் டிரம் மற்றும் டிரே, காய்கறி விதைத்தளைகள் மற்றும் மண்புழு உரத்தினையும், வேளாண்மைத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.14,890 மதிப்பீட்டில் பேட்டரி ஸ்பிரேயர், சாதாரண ஸ்பிரேயர், தார்பாலின் போன்ற நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 108 பயனாளிகளுக்கு சுமார் ரூ.11 லட்சத்து 95 ஆயிரத்து 10 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

முன்னதாக, 44வது செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்களின் சைக்கிள் பேரணியை தொடங்கிவைத்து, மகளிர் சுய உதவிக் குழுக்கள் சார்பில் நடைபெற்ற கோலப்போட்டிகள், பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளையும், துறைசார்பில் வைக்கப்பட்ட பல்துறை விளக்க கண்காட்சி அரங்குகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் பார்வையிட்டார்.

 

இந்நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் வருவாய் கோட்டாட்சியர் (பொ) மதியழகன், அம்பல் ஊராட்சிமன்ற தலைவர் சீதளாபாலாஜி, நாகப்பட்டினம் வட்டாட்சியர் பி.எம்.அமுதா, திருமருகல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பொதுமக்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.

செய்தித் தொகுப்பு டாக்டர். எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

Previous Post

தூத்துக்குடி மாவட்டம் மேலஆத்தூர் மற்றும் கொட்டாரக்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தயாரிக்கப்படும் ஆகாய தாமரை மதிப்பு கூட்டு பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், செய்தியாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். 

Next Post

12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..தமிழக அரசு அதிரடி..!

Next Post
முழு ஊரடங்கு காலத்தில் ஏற்றுமதி செய்ய 8 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி

12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..தமிழக அரசு அதிரடி..!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In