வேதாரண்யத்தில் வேதாரணியம் காவல் உட்கோட்ட மனுநீதி நாள் முகாம்
வேதாரண்யம் ஜூலை 20
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் வேதாரணியம் காவல் உட்கோட்டம் மனுநீதி நாள் முகாம் நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவஹர் தலைமையில் 20.07.2022
காலை 11 மணிக்கு வேதாரண்யத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த மனுநீதி நாள் முகாமில் வேதாரணியம் மாவட்ட துணை கண்காணிப்பாளர் முருகவேல்,வேதாரணியம் காவல் ஆய்வாளர் சுப்ரியா,உதவி ஆய்வாளர் பன்னீர்செல்வம்,கரியாப்பட்டினம் காவல் ஆய்வாளர் நாகலட்சுமி,வாய்மேடு காவல் ஆய்வாளர் கன்னிகா,தலைஞாயிறு காவல் ஆய்வாளர் செந்தில்குமார்,வேட்டைக்காரனிருப்பு உதவி ஆய்வாளர் தேவசேனாதிபதி,வாய்மேடு காவல் உதவி ஆய்வாளர் வாகேஸ்வரன் மற்றும் வேதாரணியம் உட்கோட்ட காவல் நிலையங்களில் உள்ள காவலர்களும் கலந்துகொண்டனர்.இந்த மனுநீதி நாள் முகாமில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இதில் 50 மனுக்கள் பெறப்பட்டு 30 மனுக்களுக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர் முன்னிலையில் உடனடி தீர்வு காணப்பட்டது.செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்

செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

