நாகை ஜூலை 11
நாகப்பட்டினத்தில் 11.07.2022 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் உலக மக்கள் தொகை தினம்’2022 குறித்த விழிப்புணர்வு உறுதி மொழியினை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜ்குமார் வாசிக்க, அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்திய அரசு மற்றும் தமிழக அரசின் உத்தரவிணற்க உலக மக்கள் தொகை தினம் -2022 அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சூலை 11ந் தேதி உலக மக்கள் தொகை தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் அறிவியலும், மருத்துவமும் வளர்ச்சி அடையாத காலத்தில் மக்கள் தொகை பெருக்கம் நிலையானதாக ஒரு கட்டுக்குள் இருந்ததது. பிறப்பு விகிதமும் இறப்பு விகிதமும் ஒரளவு சமமாக இருந்து வந்ததேயாகும். ஆனால், தற்போது மருத்துவ அறிவியலின் வளர்ச்சியால் இறப்பு பெருமளவில் குறைக்கப்பட்டு விட்டது. அதே சமயம் பிறப்பு விகிதம் குறையவில்லை. இந்தியாவில் மக்கள் தொகை 142 கோடியாக நெருங்கி விட்டது. தமிழ்நாட்டின் மக்கள் தொகை 8.4 கோடியை தாண்டிவிட்டது. மக்கள் தொகையில் முதல் இடத்தில் சீனா முதலிடத்தில் உள்ளது. இந்தியா 2- வது இடத்தில் உள்ளது. உலகிலேயே குடும்பநல திட்டத்தை ஒரு அரசின் திட்டமாக செயல்படுத்தியது இந்திய நாட்டில் தான், குடும்பநல திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது.


அதன் பின்னர் விழிப்புணர்வு ரதத்தினை நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு. விஸ்வநாதன் , துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் மரு. விஜயகுமார், ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இவ்;விழாவில் இணை இயக்குநர் நலப்பணிகள் ஜோஸ்பின் அமுதா மற்றும் குடும்பநல அலுவலக பணியாளர்கள், மற்றும் செவிலியப் பயிற்சி பள்ளி முதல்வர், மற்றும் மாணவிகள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்

