வேதாரண்யத்தை அடுத்த செம்போடை யில் ரூபாய் 90 லட்சம் மதிப்புள்ள மூன்றே முக்கால் கிலோ அம்பர்கிரீஸ் பறிமுதல் 6 பேர் கைது .
வேதாரண்யம் ஜூலை 9
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த செம்போடை புஷ்பவனம் பாலம் அருகில் வேதாரணியம் மற்றும் நாகப்பட்டினம் வனத்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நான்கு இரு சக்கர வாகனங்களில் வந்தவர்களை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்களிடம் ரூபாய் 90 லட்சம் மதிப்புள்ள மூன்றே முக்கால் கிலோ அம்பர் கிரீஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இந்த அம்பர் கிரீஸ் வைத்திருந்த 6 பேரை கைது செய்தனர்.

ஆறுகாட்டுத்துறை சேர்ந்த ஆண்டவர், சிவலிங்கம் பெரியகுத்தகை சேர்ந்த மணிவாசகன் நாகப்பட்டினத்தை சேர்ந்த ஓம்பிரகாஷ் ஒரத்தூரை ச்சேர்ந்த இளையராஜா திருத்துறைப்பூண்டி சேர்ந்த சரவணன்
ஆகிய 6 பேரை கோடியக்கரை வனசரக அலுவலர் அயூப்கான் நாகப்பட்டினம் வனசரக அலுவலர் ஆதிலிங்கம் மற்றும் கோடியக்கரை வனசரக காவலர்கள் பெரியசாமி சதீஷ்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் கைது செய்து நான்கு இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடாநாகை மாவட்ட செய்தியாளர் .

