உப்பு சத்தியாக்கிரக 92வது நினைவு தினத்தையொட்டி பாதயாத்திரை நிறைவு.
வேதாரணியம் ஏப்ரல் 29
இந்தியா ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்தபோது உப்புக்கு வரி விதித்ததை கண்டித்து சுதந்திரப் போராட்ட வீரர்கள் உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்துவது என தீர்மானித்தனர் . மகாத்மா காந்தி தலைமையில் தண்டியிலும், வேதாரண்யத்தில் மூதறிஞர் ராஜாஜி தலைமையிலும் உப்பு சத்தியாக்கிரக போராட்டம் 1930ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெற்றது.இப்போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக திருச்சியிலிருந்து சுதந்திரப் போராட்ட வீரர்கள் பல கிராமங்களை கடந்து வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி பகுதியில் உப்பை அள்ளினர். அந்த நாளை நினைவு கூறும் வகையில் கடந்த 13-ஆம் தேதி திருச்சியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசின் தமிழக முன்னாள் தலைவர் கே.வி. தங்கபாலு தலைமையிலான குழுவினர் பாதயாத்திரையாக இன்று வேதாரண்யம் வந்தடைந்தனர். அவர்களுக்கு பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.வி ராஜேந்திரன் தலைமையிலான குழுவினர் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பளித்தனர். மகளிர் அணியினர் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.இன்று வந்தடைந்த பாதயாத்திரை குழுவினர் வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரக நினைவு கட்டிடத்தில் தங்கி நாளை காலை உண்ணாவிரதத்தில் ஈடுபடுகின்றனர். மாலை நடைபெறும் பேரணியின் தொடர்ச்சியாகராஜாஜி பூங்கா வளாகத்தில் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. மறுநாள் 30ம் தேதி காலை 6 மணிக்கு வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரக கட்டிடத்திலிருந்து புறப்பட்டு அகஸ்தியன்பள்ளி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உப்பு சத்தியாகிரக நினைவு தூண் அருகே உப்பு அள்ளும் நிகழ்வு நடைபெற இருக்கிறது .



பாதயாத்திரை குழுவினரை சர்தார் வேதரத்தினம் பிள்ளை அவர்களின் பேரனும் வேதாரண்யம் குருகுலம் அறக்கட்டளை கயிலைமணி
A.வேதரத்தினம் வேதாரண்யம் நகர காங்கிரஸ் தலைவர் வைரவன், நகர துணைத்தலைவர் அர்ஜுனன்,
காங்கிரஸ் வர்த்தக அணி மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் உசேன் ,
காங்கிரஸ் சிறுபான்மை அணி மாவட்ட துணைத்தலைவர் ரபிக்
மகளிர் அணி சார்பில் பஞ்சநதிக்குளம் பஞ்சாயத்து தலைவர் சத்யகலா செல்வராணி
INTUC உப்பு தொழிலாளர் சங்கம் சார்பில் துணைத் தலைவர் தங்கமணி, பொருளாளர் தாயுமானவன் , காங்கிரஸ் இளைஞர் அணி மாவட்ட துணை தலைவர் ஆப்கான் காங்கிரஸ் தகவல் தொழில்நுட்ப
அணி விக்னேஸ்வரன் மற்றும் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் வரவேற்றனர்
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்

