விளாத்திகுளம் உட்கோட்டத்தில் எட்டயபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் போலீஸ் விசாரணை .
???? *தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.திரு.L. பாலாஜி சரவணன் அவர்களின் உத்தரவுப்படி விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்களின் அறிவுரைப்படி உட்கோட்டம் முழுவதும் காவலர்கள் உஷார் நிலையில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.*
???? *இந்நிலையில் இன்று காவலர்கள் எட்டயபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கீழவாசல் அருகே மூட்டைகளில் சிலர் ஏதோ வாங்கி வைத்து கொண்டிருந்தனர். காவலர்களை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் ஓடிவிட்டார்கள், சந்தேகத்தின் பேரில் அங்கு சென்று பார்க்கும் பொழுது 1 டன் ரேஷன் அரிசியை சட்ட விரோதமாக கடத்த முயன்றது தெரியவந்தது. ரேஷன் அரிசியை நிலையம் கொண்டு வந்து மேற்கொண்டு தப்பித்து ஓடியது யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.*
சிறப்பாக செயல்பட்டு ரேஷன் அரிசி கடத்தலை தவிர்த்து அரிசியை பறிமுதல் செய்த அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களை விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.*

