நாகை அருகே 400 கிலோ கஞ்சா படகுடன் பறிமுதல்
வேதாரண்யம் பிப் 19
நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் உதவி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் கண்காணிப்பு பணியில் செய்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நேற்று 18ம் தேதி 7.00 மணியளவில் நாகப்பட்டினம் கீச்சாங்குப்பம் பழைய மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோகன் என்பருக்கு சொந்தமான படகை சோதனை செய்த போது அதில் சுமார் 1 கோடி மதிப்புள்ள 400 கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைத்திருந்ததை தனிப்படை கைப்பற்றி, படகு, 4 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து, இதில் சம்மந்தப்பட்ட படகு உரிமையாளர் அக்கறைப்பேட்டை திடிர்குப்பம் மோகன் (37), நிவாஸ் (30), தெற்குதெரு சிலம்புசெல்வன் (35), கீச்சாங்குப்பம் ஜெகதீஷ் (34), திருவனந்தபுரம் பாப்பாகோயில் சரவனவா (37) ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். குற்றவாளிகளை விரைந்து கைது செய்த காவலர்கள் காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
நாகை மாவட்ட எஸ்பி ஜவஹர் அவர்களின் இந்த அதிரடி நடவடிக்கையால் சமூக விரோதிகள் கலக்கத்தில் உறைந்துள்ளனர்

செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளா்,
வேதாரண்யம்.

